Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Jemimah Rodrigues : 2015 ஆம் ஆண்டு ஆண்கள் அரையிறுதியில் ஆஸி அணியிடம் தோனியால் செய்ய முடியாததை ஜெமிமா இன்று 10 ஆண்டுகளுக்கு பிறகு செய்துக்காட்டினார்.

மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 2015 ஆம் ஆண்டில் ஆண்கள் உலகக்கோப்பை தோல்விக்கு பழித்தீர்த்தது,
இந்திய வெற்றி:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஜெமிமா ரோட்டரிசின் அசத்தல் சதத்தால் 48.3 ஓவர்களில் 48.3 ஓவர்களில் வெற்றி பெற்றது.
10 ஆண்டு சோகத்திற்கு முடிவு
இந்திய ஆண்கள் அணி 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. அந்தத் தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்திய அணி ஆஸ்திரேலியவிடம் அரை இறுதியில் படுதோல்வி அடைந்தது. அந்த அப்போதைய இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி தனி ஆளாக போராடி தோல்வியை தடுக்கமுடியவில்லை
அந்த தோல்விக்கு தற்போது இந்திய மகளிர் அணி பழி தீர்த்துள்ளது குறிப்பாக இந்த தொடர் முழுவதும் தோல்வி இல்லாமல் வந்த ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் இந்திய அணி இடம் தோற்றது. அன்று தோனியால் செய்ய முடியாததை ஜெமிமா இன்று செய்துக்காட்டினார்.
கடவுளுக்கு நன்றி:
ஆட்டநாயகி விருதை வென்ற ஜெமிமா கண்ணீருடன் பேசியது,
“முதலில், நான் இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதை என்னால் தனியாகச் செய்ய முடியவில்லை. இன்று அவர் என்னைத் தாங்கிச் சென்றார் என்பது எனக்குத் தெரியும்,” என்று தொடங்கிய அவர், தன் பெற்றோர், பயிற்சியாளர் மற்றும் கடந்த நான்கு மாதங்களாக தன்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இது ஒரு கனவு போல இருக்கிறது. கடந்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. ஆனால் இன்று நம் நாடு வெற்றி பெற்றது என்பதே எனக்குச் சுகமான உணர்வு, நான் மூன்றாவது இடத்தில் விளையாடப் போகிறேன் என்று இறுதி நேரத்தில் தான் தெரிந்தது. ஆனால் நான் என் மீது யோசிக்கவில்லை. என் நோக்கம் இந்தியாவுக்காக வெற்றி பெறுவதே,” என்றார்.
இன்று எனது 50 அல்லது 100 பற்றி அல்ல. இன்று இந்தியாவை வெற்றி பெறச் செய்வது பற்றியது. கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுக்கிறார்,” என்று பதிலளித்தார்.
“கடந்த ஆண்டு நான் உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருந்தது. இந்த ஆண்டு வந்தபோது ‘இம்முறை முயற்சிப்பேன்’ என்று நினைத்தேன். ஆனாலும் விஷயங்கள் எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. இந்த சுற்றுப்பயணம் முழுவதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அழுதேன். ஆனால் கடவுள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
எனது மனதில் நிலைத்திருந்த பைபிள் வசனம் —“அசையாமல் நில், கடவுள் உனக்காகப் போராடுவார்.”
“நான் சோர்வாக இருந்தபோது, அந்த வசனத்தை மனதில் சொன்னேன். உண்மையிலேயே, அவர் எனக்காகப் போராடினார்.
ஹர்மான் டி வந்ததும், நாங்கள் பார்ட்னர்ஷிப் பற்றி பேசினோம். ரிச்சா, தீப்தி, அமன்ஜோத் — எல்லோரும் என்னை ஊக்குவித்தார்கள். நான் சோர்ந்தபோது, அவர்கள் என்னை தாங்கினார்கள். அதற்காக நான் எதற்கும் பெருமை கொள்ள முடியாது.
அந்த வெற்றித் தருணத்தில் மைதானம் முழுவதும் முழங்கிய ரசிகர்களைப் பற்றியும் அவர் கூறினார்:
“நவி மும்பை எனக்கு எப்போதும் சிறப்பு. அவர்கள் கொடுத்த ஆதரவுக்கு, உற்சாகத்துக்கு, ஒவ்வொரு குரலுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தான் எனக்குத் தைரியம் கொடுத்தார்கள்.” என்றார்





















