Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Ind W vs Aus W: பரபரப்பான அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதிப்பெற்றது

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதிப்பெற்றது
உலகக் கோப்பை - 2வது அரையிறுதி
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின,
இந்தப்போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்களும், ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்களும் செய்யப்பட்டு இருந்தது.
ஏமாற்றம் தந்த அலீசா ஹீலி:
மழை அச்சத்தோடு தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாடினார். இந்திய என்றாலே காட்டடி அடிக்கும் கேப்டன் அலீசா ஹீலி ஆரம்பத்திலிருந்தே தடுமாறிக் கொண்டிருந்தார். 2 ரன்னில் இருக்கும் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் வீணாடித்தார். ஆனால் ஹீலியின் அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கிராந்தி கவுட் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 5 ரன்னுக்கு நடையைக்கட்டிய நிலையில் மழையானது குறுக்கிட்டது.
சதம் அடித்த லிட்ச்பீல்ட்:
இளம் வீராங்கணையான தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார், அவருக்கு பக்கபலமாக அனுபவ வீராங்கணையான எலீஸ் பெர்ரி அரைசதம் அடித்தார், லிட்ச்பீல்ட் 119 ரன்னுக்கு ஆட்டமிழக்க , பெர்ரியும் 77 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
கம்பேக் கொடுத்த இந்தியா;
ஒரு கட்டத்தில் 350 ரன்களை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஸ்மிருதி மந்தனா ஏமாற்றம்:
339 என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கம் எதிர்ப்பார்த்த அளவுக்கு அமையவில்லை, ஷாபாலி வர்மா 10 ரன்களுக்கும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 24 ரன்னுக்கு நடையை கட்டினர்.
ஜெமிமா - ஹர்மன் அபாரம்:
59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கி அணியை சரிவிலிருந்து மீட்டனர், ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹர்மன் நன்றாக செட் ஆன பிறகு தனது அதிரடியை காட்டினார், ஜெமிமாவும் அவ்வப்போது தேவையான பவுண்டரிகளை அடித்தார், இருவரும் அரைசதம் அடிக்க ஆஸ்திரேலிய கேப்டன் அலீசா ஹீலி நெருக்கடிக்கு உள்ளனார்.
ஜெயித்துக்காட்டிய ஜெமிமா:
89 ரன்னுக்கு ஹர்மன் ஆட்டமிழக்க, அடுத்த தீப்தி மற்றும் ரிச்சா கோஷ் விரைவாக ரன் அடிக்க ஜெமிமா இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்திய அணி நாக் அவுட் செய்தது
வாய்ப்புகளை வீண்டித்த ஆஸ்திரேலியா:
ஜெமிமா 82 ரன்களை எடுத்து இருந்த போது கிடைத்த கேட்ச் வாய்ப்பை கேப்டன் ஹீலி வீணாடித்தார், அதே போல் ஜெமிமா சதம் அடித்த பின்னர் கிடைத்த வாய்ப்பை ஆஸ்திரேலிய அணியினர் வீணடித்தனர். இந்த கேட்ச்களை பிடித்து இருந்தால் போட்டியின் போக்கு மாறியிருக்கலாம்,
புதிய சாம்பியன் யார்?:
இந்திய அணி ஞாயிறன்று (நவம்பர் 2) தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது, இரண்டு அணிகளுமே இது வரை கோப்பையை வெல்லாததால் புதிய சாம்பியன் யார் என்கிற ஆவல் உருவாகியுள்ளது





















