Watch Video : க்யூட்டோ க்யூட்..! பாக்., கேப்டனின் மகளை கொஞ்சித் தீர்த்த இந்திய வீராங்கனைகள்! வீடியோ!
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் கேப்டனின் குழந்தையை இந்திய வீராங்கனைகள் கொஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகளிர் உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி நிறைவடைந்த பிறகு இந்திய வீராங்கனைகளும், பாகிஸ்தான் வீராங்கனைகளும் பரஸ்பரம் சந்தித்து பேசினர். அப்போது, பாகிஸ்தான் அணியின் பிரபல வீராங்கனையும், அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனுமாகிய மரூப் பிஸ்மாவின் குழந்தையை இந்திய வீராங்கனைகள் சுற்றி நின்று கொஞ்சினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மரூப் பிஸ்மா தனது கைக்குழந்தையைான பாத்திமாவை தனது தோளில் தட்டி தூங்க வைக்கிறார். அந்த குழந்தையை சுற்றி நின்று இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஹர்மன்பிரித் கவுர் உள்ளிட்ட பலரும் கொஞ்சுகின்றனர். இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவதுடன், பாராட்டியும். வாழ்த்தியும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
This is the best thing you’ll see today! @maroof_bismah and her daughter celebrated by both India and Pakistan cricket teams 💙 #WCC2022 pic.twitter.com/aNtNPnrhQ7
— Shilpa (@shilpakannan) March 6, 2022
பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான பிஸ்மா தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் கேப்டனாக பதவி உயர்ந்தவர். அவர் இதுவரை 109 ஒருநாள் போட்டியில் ஆடி 14 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 617 ரன்களும், 108 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 225 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 99 ரன்களும், டி20 போட்டியில் அதிகபட்சமாக 70 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 44 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு அப்ரார் அகமது என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. உலககோப்பை நடைபெறும் நியூசிலாந்து நாட்டிற்கு தனது குடும்பத்தினருடன் பிஸ்மா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : CSK Match 2022 Schedule: ஹலோ.. சிஎஸ்கே ஃபேன்ஸ்.! இந்தாங்க டைம் டேபிள்! எப்போ மேட்ச்.. யாரோடு மேட்ச்? முழு லிஸ்ட்!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்