CSK Match 2022 Schedule: ஹலோ.. சிஎஸ்கே ஃபேன்ஸ்.! இந்தாங்க டைம் டேபிள்! எப்போ மேட்ச்.. யாரோடு மேட்ச்? முழு லிஸ்ட்!!
2022ம் ஆண்டிற்கான டாடா ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை சற்றுமுன் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டிற்கான முதல் போட்டியில் வரும் 26-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் மொத்தம் 14 லீக் போட்டிகளில் ஆட உள்ளது. அவற்றின் பட்டியல் பின்வருமாறு:
- சென்னை – கொல்கத்தா
மார்ச் 26-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் வான்கடே மைதானத்தில் மோதுகிறது. நேரம் மாலை 7.30 மணி
- சென்னை – லக்னோ
மார்ச் 31-ந் தேதி புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ப்ராபோர்ன் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு மோதுகிறது.
- சென்னை – பஞ்சாப்
ஏப்ரல் மாதம் 3-ந் தேதி பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடன் ப்ராபோர்ன் மைதானத்தில் அன்றைய மாலை 7.30 மணிக்கு மோத உள்ளது.
- சென்னை – ஹைதராபாத் :
ஏப்ரல் 9-ந் தேதி டி.ஒய். பட்டீல் மைதானத்தில் ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி மோத உள்ளது.
- சென்னை – பெங்களூர்
ஏப்ரல் 12-ந் தேதி மாலை 7.30 மணிக்கு டி.ஒய். பட்டில் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத உள்ளது.
- சென்னை – குஜராத் டைட்டன்ஸ்
புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வரும் ஏப்ரல் 17-ந் தேதி புனேவில் மாலை 7.30 மணிக்கு சென்னை மோதுகிறது.
- சென்னை – மும்பை
ஐ.பி.எல். போட்டியின் பரம வைரிகளான சென்னையும், மும்பையும் வரும் ஏப்ரல் 21-ந் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு மோதுகிறது.
- சென்னை – பஞ்சாப்
ஏப்ரல் 25-ந் தேதி பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடன் வான்கடே மைதானத்தில் சென்னை அணி மோதுகிறது.
- சென்னை – ஹைதராபாத்:
மே 1-ந் தேதி புனேவில் ஹைதராபாத் அணியுடன் மாலை 7.30 மணிக்கு சென்னை அணி மோதுகிறது.
- சென்னை – பெங்களூர்
மே 4-ந் தேதி புனேவில் உள்ள மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் சென்னை அணி மாலை 7.30 மணிக்கு மோதுகிறது.
- சென்னை – டெல்லி :
மே மாதம் 8-ந் தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி அணியுடன் சென்னை அணி மோதுகிறது. மாலை .7.30 மணிக்கு நவி மும்பையில் இந்த போட்டி நடக்கிறது.
- சென்னை – மும்பை :
சென்னை அணி மும்பை அணியுடன் மீண்டும் மே 12-ந் தேதி வான்கடே மைதானத்தில் மோதுகிறது. மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
- சென்னை – குஜராத்:
சென்னை அணி வரும் மே 15-ந் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மாலை 7.30 மணியளவில் மோதுகிறது.
- சென்னை – ராஜஸ்தான்:
சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியாக மே 20-ந் தேதி ப்ராபோர்ன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுடன் மட்டுமே சென்னை அணி ஒரு முறை மோதுகிறது. இதர அணிகளுடன் தலா 2 முறை மோதுகிறது.