நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
ICC T20 world Cup Championship: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை தாயகம் திரும்பவுள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சியின் நிரல் குறித்து தெரிந்து கொள்வோம்.
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, மேற்கு வங்கத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில், ஏன் தாமதம், எப்போது வருகிறார்கள்? என்ன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ஏன் தாமதம்:
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் புயல் தாக்கியது. இதையடுத்து, விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால், இந்தியர்களின் தாயகம் திரும்பும் பயணமானது, தாமதமானது.
Prime Minister Narendra Modi to meet Men's Indian Cricket Team tomorrow at 11 am.
— ANI (@ANI) July 3, 2024
The Team that is bringing home the #T20WorldCup2024 trophy, will arrive from Barbados tomorrow, July 4, early morning. pic.twitter.com/UvUyxniQLJ
எப்போது வருவார்கள்?
இந்நிலையில், தற்போது வானிலை சீரான நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் இருந்து விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் புறப்பட்டனர். இவர்கள், நாளை காலை சுமார் 6 மணி அளவில் டெல்லிக்கு வந்தடைவார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி சந்திப்பு:
உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி வீரர்களை நேரில் பாராட்டவுள்ளார். இந்த பாராட்டு நிகழ்வானது, நாளை காலை சுமார் 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வாகன பேரணி:
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தை சிறப்பிக்க்கும் வகையில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் வாகனத்தில் பேரணியாக செல்லவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பேரணி முடிந்தவுடன் மைதானத்தில், கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
🏆🇮🇳 Join us for the Victory Parade honouring Team India's World Cup win! Head to Marine Drive and Wankhede Stadium on July 4th from 5:00 pm onwards to celebrate with us! Save the date! #TeamIndia #Champions @BCCI @IPL pic.twitter.com/pxJoI8mRST
— Jay Shah (@JayShah) July 3, 2024