Rohit Sharma: அஸ்வினை கழட்டி விட்டதற்கு வானத்தை கை காட்டிய ரோகித் சர்மா.. என்ன சொன்னார் தெரியுமா?
WTC Final 2023: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த பின்னர் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி குறித்து கூறினார்.
WTC Final 2023: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த பின்னர் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி குறித்து கூறினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தான் 2023ஆம் ஆண்டிற்கான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதவுள்ள அணிகள் என்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஏறத்தாழ ப்ளேயிங் லெவனில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்து கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. இறுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஹோசில் வுட் தொடரில் இருந்து விலகினார்.
ஆனால் இந்திய அணி தரப்பில் ப்ளேயிங் லெவன் இறுதி வரை முடிவு செய்யப்படாமலே இருந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர் யார்? கே.எஸ் பரத்தா? இல்லை இஷான் கிஷனா என்ற கேள்வி இருந்து வந்தது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணித்தரப்பிலும் இறுதிவரை உறுதிப்படுத்தாமலே இருந்தது.
இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி இறுதிப் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இதனால், இந்திய அணி மிகவும் மகிச்சியாக இருந்தது. மேலும், பலமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது மிகவும் சரியான முடிவு என பலரும் நினைத்தனர்.
அதன் பின்னர் ப்ளேயிங் லெவன் குறித்து கூறிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வானிலை மேகமூட்டத்துடன் இருப்பதால், நாங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளோம் என்றார். மேலும், பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் சுழற்பந்து வீசுவதுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் ஜடேஜாவை அணியில் தேர்வு செய்வது மிகவும் சரியான முடிவாக இருக்கும் என கூறினார்.
ரோகித் சர்மாவின் இந்த முடிவு குறித்து பலரும் தங்களது கருத்தினை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஆஸ்வினுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மிகவும் சிரமப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் முக்கியமான போட்டியில் இந்திய அணி அஸ்வினை ப்ளேயிங் லெவனில் இல்லாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினைப் பொறுத்தவரையில், 2021 - 2023ஆம் ஆண்டுக்கான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 61 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும் இவரது ஆவரேஜ் 19.67ஆக உள்ளது. மேலும், இரண்டு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்