'அது முதுகெலும்பு இல்லாதவர்களின் செயல்'- ஷமி மீதான தாக்குதல் குறித்து பேசிய விராட் கோலி !
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீதான தாக்குதலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது.
அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது சிலர் மத ரீதியிலான தாக்குதலை நடத்தினர். அவர் குறித்து பலரும் தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். முகமது ஷமிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் ஆதரவு அளித்தனர். அத்துடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் ஆதரவு அளித்தனர்.
Proud 🇮🇳
— BCCI (@BCCI) October 26, 2021
Strong 💪
Upward and onward 👍 pic.twitter.com/5NqknojVZj
இந்நிலையில் நியூசிலாந்து போட்டிக்கு முன்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராட் இந்த சம்பவம் தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “முகமது ஷமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது முதுகு எலும்பு இல்லாத மனிதர்களின் செயல். அது முற்றிலும் தவறானது. ஒரு மனிதரின் மதத்தை வைத்த நாம் ஒருபோதும் அவர்களை தாக்க கூடாது. களத்தில் விளையாடும் நாங்கள் எப்போதும் இதுபோன்ற தாக்குதல்களை ஏற்று கொள்ள மாட்டோம். இந்திய அணியில் எப்போதும் ஒருவொருக்குவர் இடையே சகோதரத்துவம் உள்ளது. அதை நாங்கள் எப்போதும் கடைபிடிப்போம்.
முகமது ஷமி நாங்கள் ஆதரவாக இருப்போம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது குணமடைந்து நல்ல உடற்தகுதியுடன் உள்ளார்” எனக் கூறியுள்ளார். மேலும் அடுத்தப் போட்டியில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்படுவாரா என்பது தொடர்பாகவும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு கோலி, "ஷர்தல் தாகூர் எந்த ஒரு விஷயத்தை சிறப்பாக செய்யக்கூடியவர். அவரை அணியில் சேர்ப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். எனினும் அது குறித்து தற்போது என்னால் தெளிவாக கூறமுடியாது" எனத் தெரிவித்தார்.
இந்திய அணி அடுத்த போட்டியில் நாளை பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. முதல் சூப்பர் 12 போட்டியில் இந்த இரு அணிகளும் தோல்வி அடைந்துள்ளனர். ஆகவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இரண்டு அணிகளும் எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆகவே இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
மேலும் படிக்க: டி-20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரஷீத் ; இவரின் ரெக்கார்டை முறியடித்து சாதனை!