Rashid khan: டி-20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரஷீத் ; இவரின் ரெக்கார்டை முறியடித்து சாதனை!
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ரஷித் கான். முன்னாள் இலங்கை வீரர் லசித் மலிங்காவின் ரெக்கார்டை முறியடித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எட்டாவது நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை பதிவு செய்தது. அடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் கடைசி நிமிட த்ரில் வெற்றி பெற்று ஹாட்- ட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றிருந்தாலும், கடைசி வரை பாகிஸ்தானுக்கு டஃப் கொடுத்தது. இந்த போட்டியில், 4 ஓவர்கள் வீசிய ரஷீத் கான், இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது கிரிக்கெட்டர் ஆனார். அதுமட்டுமின்றி, அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னாள் இலங்கை வீரர் லசித் மலிங்காவின் ரெக்கார்டை முறியடித்துள்ளார்.
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள்:
பந்துவீச்சாளர் | இன்னிங்ஸ் |
ரஷீத் கான் | 53 |
லசித் மலிங்கா | 76 |
டிம் சவுதி | 82 |
ஷகில் அல் ஹசன் | 83 |
Afghanistan superstar @rashidkhan_19 becomes just the fourth player to take 100 wickets in men’s T20Is! 🔥#PAKvAFG | #T20WorldCup
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 29, 2021
ஆப்., vs பாக்., ரீகேப்:
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இரண்டு, மூன்றாவது ஓவர்களிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. டெயில் எண்டர்களான முகமது நபி (35*), குல்பதின் நயிப் (35*) களத்தில் நின்று ரன் சேர்த்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்து போட்டிகளை வென்ற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதிரடியான சேஸிங் செய்து போட்டியை கைப்பற்றியது. கடைசி ஓவரில் 4 சிகசர்கள் எடுத்து ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது பாகிஸ்தான் அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்