![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND Vs SL T20 LIVE: அர்ஷ்தீப், சாஹல் மிரட்டல்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்..!
IND Vs SL T20 LIVE: இந்தியா - இலங்கை இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்
LIVE
![IND Vs SL T20 LIVE: அர்ஷ்தீப், சாஹல் மிரட்டல்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்..! IND Vs SL T20 LIVE: அர்ஷ்தீப், சாஹல் மிரட்டல்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்..!](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Background
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த, டி-20 தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணி களம் கண்டு வருகிறது.
தொடரை வெல்லப்போவது யார்?
மும்பையில் நடைபெற்ற தொடரின் முதல் டி-போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவதுவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை உறுதி செய்யும் 3-வது கடைசி டி-20 இன்று நடைபெற உள்ளது. ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரம் காட்டுவதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை என உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பலவீனமாக கருதப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்க வேண்டி உள்ளது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, கடைசி போட்டியை போன்று நோ பால்களை வீசாமல் ஒழுக்கத்துடன் செயல்பட்டாலே அணியின் வெற்றிக்கு உதவ முடியும் என்பது குறிப்பிடத்தகக்து. இதனிடையே, காயம் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து, இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதிப்பாரா பாண்ட்யா?
இந்திய டி-20 அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க இந்திய கிரிக்கெட் சம்மேளனம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கிடைக்கும் சூழல்களில், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு திறமையை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பாண்ட்யா இருக்கிறார். எனவே உள்நாட்டில் நடக்கும் இலங்கை உடனான இந்த தொடரை கைப்பற்றுவது பாண்ட்யாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணியின் உத்தேச வீரர்கள்: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.
அர்ஷ்தீப், சாஹல் மிரட்டல்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்..!
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வென்று தொடரை வென்று அசத்தியுள்ளது.
இலங்கை vs இந்தியா: 11.5 ஓவர்கள் / இலங்கை - 100/5 ரன்கள்
இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 11.5 ஓவர்களில் 100 ரன்கள் கடந்துள்ளது.
இலங்கை vs இந்தியா: 6.2 ஓவர்கள் / இலங்கை - 51/3 ரன்கள்
அவிஷ்கா பெர்னாண்டோ அவுட்! ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார்.
இலங்கை vs இந்தியா: 5 ஓவர்கள் / இலங்கை - 44/1 ரன்கள்
அக்சர் பட்டேலின் ஓவரின் ஐந்தாவது பந்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இலங்கை 44 ரன்கள் எடுத்துள்ளது.
229 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்குமா இலங்கை...? தொடரை வெல்லுமா இந்தியா..?
சூர்யகுமார் யாதவ் சதத்தால் இந்தியா அணி 229 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)