IND Vs Eng Test: இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் சுருட்டுமா இந்தியா? - முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல்-அவுட்
IND Vs Eng Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
IND Vs Eng Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்திய அணி ஆல்-அவுட்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் டெஸ்டில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்களிலும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்து ஜடேஜா ஆட்டமிழந்தார். பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், அக்சர் படேல் 44 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 436 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 190 ரன்களை முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில், ஜோ ரூட் 4 விக்கெட்டுகளையும், ஹார்ட்லே மற்றும் அஹ்மது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜாக் கிராவ்லி 31 ரன்கள் எடுத்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இங்கிலாந்து அணி 49 ரன்கள் சேர்த்து, 141 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களை சேர்த்தார். இந்தியா அணி சார்பில், ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை சேர்த்தனர். அக்சர் படேல் மற்றும் பும்ரா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி அதிரடி:
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 74 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், 66 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேல். எல். ராகுல் 86 ரன்களை சேர்க்க, ஜடேஜா 87 ரன்களை சேர்த்தனர். அக்சர் படேல் 44 ரன்களையும், பரத் 41 ரன்களையும் சேர்த்தனர். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது.