Border Gavaskar Trophy : நெருங்கியது பார்டர்-கவாஸ்கர் டிராஃபி… நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஸ்டாட்ஸும், ரெக்கார்ட்ஸும்..
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 102 டெஸ்ட்களில், இந்தியா 30 வெற்றியும், 43 தோல்வியும், 28 டிராவும் செய்துள்ளது. 1986ல் சென்னையில் நடந்த ஒரு பிரபலமான ஆட்டம் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரு தினங்களில் (பிப்.09) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் தொடங்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுமா இந்தியா?
இந்தத் தொடர் ரோஹித் ஷர்மா அண்ட் கோ.விற்கு 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை தீர்மானிக்கும் தொடர் என்பதால் இறுதிப் போட்டியில் இடம்பெற, தொடரின் நான்கு போட்டிகளில் இந்தியா குறைந்தது மூன்றில் வெற்றி பெற வேண்டும். இரண்டு வெற்றிகளுடனும் தகுதி பெறலாம், ஆனால் மேற்கிந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் இலங்கையின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ஆகியவற்றில் சாதகமான முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய நிலைவரும்.
ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 102 டெஸ்ட்களில், இந்தியா 30 வெற்றியும், 43 தோல்வியும், 28 டிராவும் செய்துள்ளது. 1986-இல் சென்னையில் நடந்த ஒரு பிரபலமான ஆட்டம் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா கடைசி நான்கு முறை இந்தியா வந்ததில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முந்தைய டெஸ்ட் சுற்றுப்பயணங்களில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடியது என்பது இங்கே:
ஆஸ்திரேலியா ஃபார்ம்
சமீபத்தில் தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. அவர்கள் தற்போதைய WTC சுழற்சியில் விளையாடிய 15 டெஸ்ட் போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று முதல் ஆளாக இறுதிப்போட்டியில் இடத்தை பிடித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலேயில் இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்டில் தோல்வியடைந்துள்ளனர். இந்த சாதனை அவர்களை 75.56 சதவீத புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் வைத்துள்ளது.
இந்திய சுழல் மந்திரம் பலிக்குமா?
ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் அடங்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய மைதானங்களில் தங்களது சுழல் திறமையை வலுவாக காட்டுவார்கள் என்பது உறுதி. இருப்பினும், ஆடம் கில்கிறிஸ்ட் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய ஆஸ்திரேலிய அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர். 2014/15க்குப் பிறகு முதல் முறையாக இந்திய மண்ணில் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரை வெல்லும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும், இந்தியாவின் முதன்மையான ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை சமாளிக்க தனது பேட்டிங்கில் அவர் செய்த மாற்றங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் மார்னஸ் லாபுஷாக்னே பேசினார். கடைசியாக இரு அணிகளும் மோதியபோது, அவரை இரண்டு முறை ஆட்டமிழக்க செய்தவர் அஸ்வின்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி மாதத்தில், தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து புள்ளிவிவரங்களும் பதிவுகளும் இங்கே:
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்:
சச்சின் டெண்டுல்கர் - 36 இன்னிங்ஸ்களில் 56.9 சராசரியுடன் 1821 ரன்கள்
விவிஎஸ் லக்ஷ்மன் - 25 இன்னிங்ஸ்களில் 57.04 சராசரியில் 1198 ரன்கள்
ராகுல் டிராவிட் - 30 இன்னிங்ஸ்களில் 35.71 சராசரியில் 1000 ரன்கள்
சேதேஷ்வர் புஜாரா - 16 இன்னிங்ஸ்களில் 64.28 சராசரியில் 900 ரன்கள்
குண்டப்பா விஸ்வநாத் - 16 இன்னிங்ஸ்களில் 60.85 சராசரியில் 852 ரன்கள்
இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 ஆஸ்திரேலியர்கள்:
மேத்யூ ஹைடன் - 22 இன்னிங்ஸ்களில் 51.35 சராசரியில் 1027 ரன்கள்
மைக்கேல் கிளார்க் - 25 இன்னிங்ஸ்களில் 40.5 சராசரியில் 972 ரன்கள்
ஆலன் பார்டர் - 16 இன்னிங்ஸ்களில் 51.06 சராசரியில் 766 ரன்கள்
சைமன் கட்டிச் - 20 இன்னிங்ஸ்களில் 40.83 சராசரியில் 735 ரன்கள்
ரிக்கி பாண்டிங் - 25 இன்னிங்ஸ்களில் 26.48 சராசரியில் 662 ரன்கள்
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 இந்தியர்கள்:
ஹர்பஜன் சிங் - 778.4 ஓவர்களில் 25.43 சராசரியில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அனில் கும்ப்ளே - 552 ஓவர்களில் 24.46 சராசரியில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் - 466.4 ஓவரில் 23.16 சராசரியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா - 406.3 ஓவர்களில் 18.02 சராசரியில் 49 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஜாகீர் கான் - 401.1 ஓவரில் 35.94 சராசரியில் 36 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 ஆஸ்திரேலியர்கள்:
ரிச்சி பெனாட் - 492.1 ஓவர்களில் 18.38 சராசரியில் 52 விக்கெட்டுகள்
நாதன் லயன் - 293.3 ஓவர்களில் 30.58 சராசரியில் 34 விக்கெட்டுகள்
கிரஹாம் மெக்கென்சி - 330.3 ஓவர்களில் 19.26 சராசரியில் 34 விக்கெட்டுகள்
ஷேன் வார்ன் - 459.1 ஓவரில் 43.11 சராசரியில் 34 விக்கெட்டுகள்
ஜேசன் கில்லெஸ்பி - 259.2 ஓவர்களில் 21.72 சராசரியில் 33 விக்கெட்டுகள்
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியரின் ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சு: 9/69 - ஜசுபாய் மோதிபாய் பட்டேல் - டிசம்பர் 19, 1959 - கனுபர்
இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரின் ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சு: 8/50 - நாதன் லியோனால் - 4 மார்ச், 2017 - பெங்களூர்
இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் இந்தியரின் அதிகபட்ச ஸ்கோர்: 281 - விவிஎஸ் லக்ஷ்மண் - மார்ச் 11, 2001 - ஈடன் கார்டன்
இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலியரின் அதிகபட்ச ஸ்கோர்: 210 - டீன் ஜோன்ஸ் - செப்டம்பர் 18, 1986 - சென்னை
இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ரன்: 657/7 - 11 மார்ச், 2001 - ஈடன் கார்டன்
இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த குறைந்த ரன்: 104 - நவம்பர் 3, 2004 - வான்கடே
இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன்: 577 - 29 அக்டோபர், 2004 - டெல்லி
இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் குறைந்த ரன்: 93 - நவம்பர் 3, 2004 - வான்கடே
இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதமடித்த இந்திய வீரர்: சச்சின் டெண்டுல்கர் - 5 சதங்கள்
இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர்: மைக்கேல் கிளார்க், நீல் ஹார்வி, ஸ்டீவன் ஸ்மித் தலா 3 சதங்கள்.
இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஐந்து விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்: ஹர்பஜன் சிங் - 7 முறை ஐந்து விக்கெட்டுகள்.
இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக அதிக ஐந்து விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்: ரிச்சி பெனாட் - 5 முறை ஐந்து விக்கெட்டுகள்
நடக்கப்போகும் தொடரின்போது முறியடிக்கப்படக்கூடிய சாதனைகள்:
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இன்னும் ஒரே ஒரு விக்கெட்தான் தேவை. அவ்வாறு செய்தால், 450 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்தியராகவும், ஒட்டுமொத்தமாக 9வது வீரராகவும் சாதனை படைப்பார்.
- ஏற்கனவே 3000+ டெஸ்ட் ரன்களைக் குவித்துள்ள அஸ்வின், இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால், ஷேன் வார்ன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை உள்ளடக்கிய 3000+ டெஸ்ட் ரன்களையும், 450 டெஸ்ட் விக்கெட்டுகளையும் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைவார்.
- ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் (15) அடித்த ரிக்கி பாண்டிங்கின் எண்ணிக்கையை முறியடிக்க இன்னும் இரண்டு சதங்கள் தேவை. அவர் இந்த சாதனையை எட்டினால், முறையே 12 மற்றும் 11 சதங்கள் அடித்த ஜாக் ஹோப்ஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அடங்கிய பட்டியலில் இணைவார்.
- டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 சதங்கள் எடுத்தோர் பட்டியலில் இணைய கோலிக்கு தேவைப்படும் சதங்களின் எண்ணிக்கை 3.
- எல்லா வகையான ஃபார்மட்டிலும் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவதற்கு விராட் கோலி தேவைப்படும் சதங்களின் எண்ணிக்கை 5.
- 250 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்கும் 9வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற ரவீந்திர ஜடேஜாவுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் தேவை.
- இன்னும் 11 விக்கெட்டுகள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்த 15வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஷ்வின் பெறுவார்.
- 353 ரன்கள் அடித்தால் ஸ்டீவன் ஸ்மித் 9000 ரன்களை கடக்கும் 3வது ஆஸ்திரேலியராகவும், ஒட்டுமொத்தமாக 17வது வீரராகவும் இருப்பார்.