மேலும் அறிய

100வது டெஸ்டில் அடியெடுத்து வைத்த 13வது இந்திய வீரர்..கவாஸ்கரிடம் சிறப்பு தொப்பியை பெற்ற புஜாரா..!

புஜாராவுக்கு 100 என்று எழுதப்பட்ட சிறப்பு தொப்பியை அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்த சிறப்பை நினைவுகூறும் வகையில் புஜாராவுக்கு 100 என்று எழுதப்பட்ட சிறப்பு தொப்பியை அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புஜாராவிற்கு புஜாராவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரோஹன் ஜெட்லி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். 

100வது டெஸ்டில் அடியெடுத்து வைத்த 13வது இந்திய வீரர்..கவாஸ்கரிடம் சிறப்பு தொப்பியை பெற்ற புஜாரா..!

சிறப்பு பரிசுக்கு வாங்கியதற்கு பிறகு பேசிய புஜாரா, “ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் ​​இருக்கும். இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், உங்களின் பலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும், மேலும் கடந்த இரண்டு வருடங்களாக எனது ஆட்டத்தில் சில ஷாட்களைச் சேர்த்துள்ளேன், மேலும் கிரிக்கெட் வீரராக தொடர்ந்து வளர்ந்து வருகிறேன். 

நான் அறிமுகமான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களை எடுத்திருந்தேன். ஒருவேளை அந்த 72 ரன்கள் நான் எடுக்காமல் இருந்திருந்தால் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். 2024ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் இரண்டாவது இன்னிங்ஸ் சதம் அடித்தேன். துணைக் கண்டத்திற்கு வெளியே நான் அடித்த முதல் சதம். அது என் வாழ்வில் மறக்க முடியாது. 

அதேபோல், 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சின்னசாமியில் 92 ரன்களும், 2018-19 தொடரில் அடிலெய்டில் 123 ரன்களும், கபா டெஸ்டில் நான் உடலில் அடிவாங்கி சேர்த்த 56 ரன்களும் என்னால் என்றுமே மறக்க முடியாத தருணங்கள்” என்றார்.

புஜாரா இந்திய கிரிக்கெட் அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் 7,021 ரன்கள் எடுத்துள்ளார், 2012 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 206 நாட் அவுட் அவரது அதிகபட்சமா தனிநபர் ஸ்கோர். இவர் இதுவரை 44.15 சராசரியுடன் 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடித்துள்ளார். 

இன்று 100வது டெஸ்டில் புஜாரா விளையாடுவதன் மூலம் இந்த சாதனையை படைத்த 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக,

  1. சச்சின் டெண்டுல்கர் : 200 டெஸ்ட்
  2. ராகுல் டிராவிட்: 163 டெஸ்ட்
  3. விவிஎஸ் லட்சுமண்: 134 டெஸ்ட்
  4. அனில் கும்ப்ளே: 132 டெஸ்ட்
  5. கபில்தேவ்: 131 டெஸ்ட்
  6. சுனில் கவாஸ்கர்: 125 டெஸ்ட்
  7. திலீப் வெங்சர்க்கார்: 116 டெஸ்ட்
  8. சவுரவ் கங்குலி: 113 டெஸ்ட்
  9. இஷாந்த் சர்மா : 104 டெஸ்ட்
  10. விராட் கோலி : 105 டெஸ்ட்
  11. ஹர்பஜன் சிங்: 103 டெஸ்ட்
  12. வீரேந்திர சேவாக்: 103 டெஸ்ட் 
  13. புஜாரா: 100 டெஸ்ட்

போட்டிகளில் விளையாடியுள்ளனர். 

மேலும், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, வீரேந்திர சேவாக், முகமது அசாருதின் ஆகியோருக்கு பிறகு அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் புஜாரா இருக்கிறார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget