மேலும் அறிய

Team India Head Coach: ஜிம்பாவே ஒருநாள் தொடருக்கு பயிற்சியாளராக மீண்டும் விவிஎஸ் லக்‌ஷ்மண்?-பிசிசியின் புதிய ப்ளான்

ஜிம்பாவே அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் 18ஆம் தேதி முதல் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதி பெற்றிருந்தார். இதன்காரணமாக ஜிம்பாவே தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஷிகர் தவான் துணை கேப்டனாக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியுடன் பயணம் செல்ல உள்ளார். இதன்காரணமாக ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக உள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற டி20 தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக பணியாற்றினார். 

இந்தச் சூழலில் தற்போது மீண்டும் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய தீபக் சாஹர் தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 

இந்திய அணியின் விவரம்:

கே.எல்.ராகுல்(கேப்டன்),ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்

இந்தியா-ஜிம்பாவே தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி 20ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள்  போட்டி நடைபெற உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை சமீபத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் கே.எல்.ராகுலுக்கு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஜிம்பாவே தொடர் நல்ல பயிற்சியாக அமையும் என்று கருதியுள்ளதால் அவர் அணியின் கேப்டனாக இந்தத் தொடரில் விளையாட உள்ளார்.

இந்தத் தொடருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget