(Source: ECI/ABP News/ABP Majha)
WTC Points Table: தொடரை வென்ற இந்தியா.. ஆனால் பாகிஸ்தான் முதலிடம்..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது.
தொடரை வென்ற இந்தியா:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிகு தோல்வியுற்ற பிறகு, இந்திய அணி முதல் டெஸ்டில்பங்கேற்க மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் அடிப்படையில் பெரும் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியின் கடைசி நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. 2025ம் ஆண்டு நடைபெற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான முதல் தொடரையே இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
சரிவை கண்ட இந்தியா:
தொடரை வென்று இருந்தாலும் இரண்டாவது போட்டி சமனில் முடிந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, வெற்றி விகிதத்தை 100-க்கு 100 என வைத்துக்கொண்டு, புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டி சமனில் முடிந்ததால், இந்திய அணியின் வெற்றி விகிதம் 66.67 சதவிகிதமாக சரிந்துள்ளது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
பாகிஸ்தான் முதலிடம்:
இதனிடையே, இலங்கையில் சுற்றுப்பயண்அம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்ற் பெற்ற பாகிஸ்தான், 100 சதவிகித வெற்றி விகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியல்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா முறையே முதல் இரண்டு இடங்களை வகித்துள்ளன. அவற்றை தொடர்ந்து, ஆச்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி முறையே மூன்றாவது முதல் ஐந்தாவது இடத்தை வகிக்கின்றன. அதேநேரம், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
இந்திய அணியின் பயண விவரம்:
மேற்கிந்திய திவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ந்து இன்னும் 5 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி, உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகளும், வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகளும் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது. இதேபோன்று வெளிநாட்டில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகளும், ஆச்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி விளையாட உள்ளது.