IND W vs SA W, U19 WC: 6வது ஓவரில் 26 ரன்கள்.. அதிரடியில் சரவெடி.. ஒரே ஓவரில் தென்னாப்பிரிக்காவின் கனவை சிதைத்த ஷாபாலி...!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ஷாபாலி வர்மா 16 பந்துகளில் 281.25 ஸ்டிரைக் ரேட்டுடன் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்தார்.
பெண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2023 நேற்று முதல் தொடங்கியது. உலகக் கோப்பையின் முதல் நாளான நேற்று ஷாபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சைமன் லாரன்ஸ் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 61 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கேப்டன் ஷெபாலி வர்மா.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷெபாலி வர்மா மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் ஜோடி சிறப்பான இன்னிங்ஸை ஆடியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 77 ரன்களை பகிர்ந்து கொண்டனர். ஷெபாலி 16 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்தார். இதற்குப் பிறகு, ஸ்வேதா செஹ்ராவதே ஜி. திரிஷா மற்றும் சௌமியா திவாரியுடன் இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்வேதா செஹ்ராவத் 57 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தார்.
A comprehensive victory for India against hosts South Africa in Benoni ✌️
— ICC (@ICC) January 14, 2023
Watch the Women's #U19T20WorldCup for FREE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺
📝: https://t.co/QUraqunEey pic.twitter.com/hO0GQviNfY
கடைசிவரை ஸ்வேதா ஷெராவத் ஆட்டமிழக்காமல் அசத்தினாலும், இந்திய அணியின் கேப்டன் ஷாபாலி வர்மா தென்னாப்பிரிக்கா அணியை பந்தாடிவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ஷாபாலி வர்மா 16 பந்துகளில் 281.25 ஸ்டிரைக் ரேட்டுடன் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்தார்.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்காக கடைசி பவர்பிளே ஓவரை வீச நதாபிசெங் நினி வந்தார். அந்த ஓவரை சந்தித்த கேப்டன் ஷாபாலி வர்மா தான் யார் என்பதை மீண்டும் நிரூபிக்க தொடங்கினார். அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 5 பவுண்டரிகளை அடித்த ஷாபாலி, கடைசி பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் ஷாபாலி வர்மா 26 ரன்களை குவித்தார். 5 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 44 ரன்கள் இருந்தநிலையில், பவர்பிளே முடிவில் இந்திய அணி 70 ரன்களை தொட்டது.
Shafali Verma smashed 4,4,4,4,4,6 in a single over.pic.twitter.com/A1oNRCd61L
— Johns. (@CricCrazyJohns) January 14, 2023
தற்போது ஷாபாலி வர்மா அடித்த அந்த ஓவரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அணி தனது அடுத்த குரூப்-டி ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஜனவரி 16ஆம் தேதி எதிர்கொள்கிறது.