IND vs WI: அடுத்தடுத்து சதமடித்து சீறிய சிங்கப்பெண்கள்! நடுங்கிய வெ.இண்டீஸ்! அசத்திய ஸ்மிரிதி, ஹர்மன்!
இந்திய பேட்டர்கள் சொதப்பிய நிலையில் ஓப்பனர் ஸ்மிரிதி சுதாரித்து கொண்டு ஆடினார். அடுத்து களமிறங்கிய ஹர்மனும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட, இருவரும் சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. மூன்றாவது போட்டியில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) March 12, 2022
A brilliant batting display by #TeamIndia to post 317/8 on the board against the West Indies! 👏 👏
1⃣2⃣3⃣ for @mandhana_smriti
1⃣0⃣9⃣ for @ImHarmanpreet
Over to our bowlers now! 👍 👍 #CWC22 | #WIvIND
Scorecard ▶️ https://t.co/ZOIa3KL56d pic.twitter.com/BTwRiDkuB9
இந்த போட்டியில், இந்திய பேட்டர்கள் சொதப்பிய நிலையில் ஓப்பனர் ஸ்மிரிதி சுதாரித்து கொண்டு ஆடினார். 100 ரன்கள் எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. ஸ்மிரிதி மட்டும் ரன் சேர்த்து கொண்டிருக்க, அடுத்து களமிறங்கிய ஹர்மனும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் 123 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மிரிதி அவுட்டாகி வெளியேறினார். 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அசத்தினார் ஸ்மிரிதி.
தொடர்ந்து விளையாடிய ஹர்மன் ப்ரீத்கவுர் 109 ரன்கள் எடுத்தார். இவர் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்மிரிதி, ஹர்மனின் 184 ரன் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. இதனால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளுக்கு 317 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய மகளிர் அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்