IND vs WI: ஷிகர் தவான், சுப்மன் அரைசதத்திற்கு பின்பு விட்டு விட்டு பெய்யும் மழை.. நின்ற போட்டி.. மீண்டும் தொடங்குமா?
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அவேஷ் கானிற்கு பதிலாக பிரஷீத் கிருஷ்ணா இடம்பெற்று இருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கத்தில் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து இருவரும் சற்று பவுண்டரிகள் அடிக்க தொடங்கினர். இதனால் 15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்திருந்தது.
OUT!@BCCI 🇮🇳 1st wicket down - @rashidi_jr_268 strikes getting @SDhawan25 caught by captain @nicholas_47 #MenInMaroon #WIvIND
— Windies Cricket (@windiescricket) July 27, 2022
Live scorecard: https://t.co/2CxfxBTTza pic.twitter.com/9MArlejvvu
சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஷிகர் தவான் 62 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் இருந்த சுப்மன் கில் தன்னுடைய பங்கிற்கு 60 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 22 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து ஆட்டத்தின் 23வது ஓவரில் கேப்டன் ஷிகர் தவான் ஹெய்டன் வால்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 74 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் இந்திய அணி 24 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுகிட்டது. இதன்காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை தற்போது வரை பெய்து வருகின்ற காரணத்தால் போட்டி மீண்டும் தொடங்கவில்லை. இதன்காரணமாக போட்டி முழுவதுமாக 50 ஓவர்களாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்