வெற்றியை நோக்கி இந்தியா! இறுதி நாளுக்கு சென்ற 2வது டெஸ்ட்.. டிவிஸ்ட் வைக்குமா வெஸ்ட் இண்டீஸ்
சாய் சுதர்சன் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி மேற்க்கொண்டு விக்கெட் விளாமல் பார்த்துக்கொண்டனர். சாய் சுதர்ஷன் 30 ரன்களுடனும் ராகுல் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக 121 ரன்களை மேற்கிந்திய தீவுகள் அணிகள் நிர்ணயித்துள்ளது.
டெல்லி டெஸ்ட்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்தது, இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 518 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது,
பின்னர் தங்களின் முதல் இன்னிங்ஸ்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவை விட 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி ஃபோலோ ஆன் கொடுத்தது
போராடிய வெஸ்ட் இண்டீஸ்:
முதல் டெஸ்டை போல இந்த போட்டியும் சீக்கிரம் முடிவடைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நாங்க இங்க சண்டை செய்ய வந்திருக்கோம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக போராடியது. தொடக்க ஆட்டக்காரர் கேம்பல் மற்றும் அனுபவ் வீரர் ஷாய் ஹோப் இருவரும் சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான முன்னிலையை பெற்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தனர்.
இருப்பினும், அவர்கள் ஆட்டமிழந்ததும் மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும் சிக்கலில் சிக்கியது. ஒரு கட்டத்தில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்து 311/9 என தடுமாறியது.
தலைவலி தந்த 10வது விக்கெட்:
ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஜெய்டம் சீல்ஸுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர், கிரீவ்ஸ் அரைசதம் அடிக்க 22 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. இறுதியில் பும்ராவின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வெற்றியை நோக்கி இந்தியா:
சேசிங்கை கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினர், இரண்டாவது ஓவரிலேயே வாரிக்கன் பந்துவீச்சில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் சாய் சுதர்சன் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி மேற்க்கொண்டு விக்கெட் விளாமல் பார்த்துக்கொண்டனர். சாய் சுதர்ஷன் 30 ரன்களுடனும் ராகுல் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் தேவையுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி எதாவது அதிசயத்தை நிகழ்த்துமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்





















