IND vs WI 2nd ODI LIVE: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா...!
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். அத்துடன் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7ஆவது முறையாக இந்திய அணி தொடரை வென்று அசத்தும்.
LIVE
Background
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். அத்துடன் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7ஆவது முறையாக இந்திய அணி தொடரை வென்று அசத்தும். கடைசியாக இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 4-3 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 19 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள 6 தொடர்களையும் இந்திய அணியே வென்றுள்ளது.
44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவை வெற்றி பெற்றது இந்தியா
2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது
ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
தீபக்ஹூடா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய ப்ரூக்ஸ்...! நம்பிக்கையை இழந்த மேற்கிந்திய தீவுகள்..!
மேற்கிந்திய தீவுகள் அணியின் நம்பிக்கையாக திகழ்ந்த ப்ரூக்ஸ் 44 ரன்கள் எடுத்திருந்தபோது தீபக் ஹூடா பந்தில் ஆட்டமிழந்தார்.
100 ரன்களை கடந்த மேற்கிந்திய தீவுகள் அணி...!
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இலக்கை நோக்கி ஆடி வரும் ப்ரூக்சின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 100 ரன்களை கடந்துள்ளது. சற்றுமுன்வரை மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்துள்ளது.