IND vs SL, Asia Cup Final 2023: 8-வது முறையாக இறுதிப்போட்டியில் மோதல்.. இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை.. மழைக்கு வாய்ப்பா?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இது முறையல்ல. இதற்கு முன்பு இரு அணிகளும் 7 முறை ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன.
ஆசிய கோப்பை என்றாலே அதிரடி காட்டும் இரண்டு அணிகள் இன்று இறுதிப்போட்டியில் களம் இறங்கினர். இன்று கொழும்பு ஆர்.கே பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்தியா - இலங்கை இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையுடன் இந்திய அணியும், சுப்பர்-4 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணியும் இன்றைய போட்டியில் எதிர்பார்ப்பை எகிற செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இது முறையல்ல. இதற்கு முன்பு இரு அணிகளும் 7 முறை ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதியுள்ளன.
ஒரு விரிவான பார்வை:
இரு அணிகள் மோதிய 7 இறுதிப் போட்டியில் இந்தியா 4 பட்டங்களை வென்று முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணி 3 முறை வெற்றி பெற்று கோப்பைகளை வென்றுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 1991 இல் இருவருக்கும் இடையேயான இரண்டாவது டைட்டில் போட்டியிலும், பின்னர் 1995-ல் இருவரும் மோதிய போட்டியிலும் இந்திய அணியே வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை தூக்கியது.
ஹாட்ரிக் கோப்பையை அடித்த இலங்கை அணி:
அதன்பிறகு, 1997, 2004 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில், இந்தியாவுக்கு எதிராக இலங்கை தொடர்ந்து மூன்று இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தது. ஆனால், இதற்குப் பிறகு கடைசியாக 2010-ம் ஆண்டு இரு அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்தநிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்றும், இரு அணிகளுக்கும் இடையே சமநிலை ஏற்படுமா அல்லது இந்தியா முன்னிலையை தக்கவைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆசியக் கோப்பையில் இதுவரை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்டு:
- 1988- இந்தியா
- 1991- இந்தியா
- 1995- இந்தியா
- 1997- இலங்கை
- 2004- இலங்கை
- 2008- இலங்கை
- 2010- இந்தியா
இன்றைய போட்டியில் மழை இருக்கா..?
இலங்கையில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் மழை பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான குரூப் நிலை ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்றைய டைட்டில் போட்டியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 17 (இன்று) கொழும்பில் சுமார் 80 சதவீத மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இன்றைய நாளில் மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும், இதனால் ஆட்டத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். இது தவிர இன்று காற்றின் வேகம் மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வெப்பநிலை 25-30 டிகிரிக்கு இடையில் இருக்கலாம். ஈரப்பதம் சுமார் 80 சதவீதம் இருக்கும். இருப்பினும், இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக செப்டம்பர் 18 (நாளை) திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ஐ. ., பிரபல கிருஷ்ணா, திலக் வர்மா.
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி
தசுன் ஷனக (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, துனித் வெலஸ், பிரமோத் மதுஷன், மதிஷ பத்திரன, சஹான் ஆராச்சேகே, துஷான் ஹேமந்த, கசுன் ரஜித, பின்யுரத் ரஜித, திமுரத் ரஜித கருணாரத்ன.