மேலும் அறிய

IND vs SA : இந்தியா தோற்றாலும் ஷர்துல் தாக்கூர் செய்த சாதனை..! என்ன தெரியுமா..?

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அரைசதம் அடித்த ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், பார்ல் நகரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

IND vs SA : இந்தியா தோற்றாலும் ஷர்துல் தாக்கூர் செய்த சாதனை..! என்ன தெரியுமா..?

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறினாலும் கேப்டன் பவுமா மற்றும் வான்டெர் டுசென் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 296 ரன்களை குவித்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் புவவேஸ்வர்குமாரும், ஷர்துல் தாக்கூரும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் 10 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டனாக்கி 72 ரன்களை வாரி வழங்கினார். இவற்றில் 3 நோபால்கள் அடங்கும்.

இதையடுத்து, இலக்கை நோக்கிய இந்திய அணிக்கு ஷிகர்தவானும், விராட்கோலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தும் அடுத்து வந்த ரிஷப்பண்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 214 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த பும்ரா –ஷர்துல் தாக்கூர் கூட்டணி ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டியது. இந்திய அணி தோற்றாலும் இருவரும் இணைந்து 46 பந்துகளில் 51 ரன்களை 9வது விக்கெட்டுக்கு எடுத்தனர்.

IND vs SA : இந்தியா தோற்றாலும் ஷர்துல் தாக்கூர் செய்த சாதனை..! என்ன தெரியுமா..?

ஷர்துல் தாக்கூர் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு இதுவே முதல் ஒருநாள் போட்டி அரைசதம் ஆகும். இந்த அரைசதம் மூலம் ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான ஒருநாள் போட்டியில்  8வது வீரர் அல்லது அதற்கு கீழே இறங்கி அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 5வது வீரர் ஆவார்.

இதற்கு முன்பு லேன்ஸ் குளூஸ்னர் 75 ரன்கள், மெக்லேரன் 71 ரன்கள், ஹால் 56 ரன்கள் அடித்திருந்தனர். இந்திய வீரர் சாபா கரீம் 55 ரன்களுடன் உள்ளார். பந்துவீச்சாளராக ரன்களை வாரி வழங்கினாலும், பேட்ஸ்மேனாக அசத்தலான அரைசதம் அடித்த ஷர்துல் தாக்கூரால் இந்திய அணியின் தோல்வி ரன் வித்தியாசம் குறைந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Embed widget