
IND vs SA:இந்தியா - தென்னாப்பிரிக்கா டி 20;சம்பவம் செய்த சேட்டன்! 47 பந்தில் அதிரடி சதம் விளாசிய சஞ்சு சாம்சன்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 முதல் போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 முதல் போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20:
சூர்யகுமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களம் காண்கிறது இந்திய அணி. அந்த வகையில் முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) தென்னாப்பிரிகாவில் உள்ள டர்பன் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அபிஷேக் ஷர்மா 1 பவுண்டரி மட்டுமே எடுத்து 7 ரன்களில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சே பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
SANJU SAMSON SHOW IN DURBAN! pic.twitter.com/WlSd8x0uDZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 8, 2024
பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சனுடன் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார். 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்களை குவித்தார். அதன்படி 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை குவித்திருந்தது.
47 பந்தில் சதம்..சஞ்சு சாம்சன் அதிரடி:
அதே நேரம் 9 வது ஒவரை வீச வந்த தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் பேட்ரிக் ஒரு ஓவரிலேயே வொயிட் நோபால் என ரன்களை வாரி வழங்கினார். அதன்படி 15 ஓவரை விட்டுக்கொடுத்த அவர் கடைசி பந்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுத்தார். மொத்தம் 16 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 21 ரன்னில் நடையைக்கட்டினார். இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா.
SANJU MADNESS AT DURBAN. 📢 pic.twitter.com/bSST8EJBMz
— Johns. (@CricCrazyJohns) November 8, 2024
சர்வதேச டி20 போட்டியில் அறிமுக வீரரான ஆண்டில் சைம்லேன் 10 ஓவரை வீசினார். அவரது ஓவரில் கடைசி பந்தில் திலக் வர்மா சிக்ஸரை பறக்கவிட்டார். 10.3 ஓவர் முடிவில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இதில் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என தன்னுடைய சதத்தை பதிவு செய்தார் சஞ்சு சாம்சன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

