IND vs SA: தென்னாப்பிரிக்க டி20 தொடரில் உலக சாதனையை நோக்கி இந்திய இளம்படை.. என்ன சாதனை?
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 9-ஆம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவு பெற்றது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒரு புதிய சாதனையை படைக்க உள்ளது. அதாவது தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துவிடும். தற்போது இந்திய அணி தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான தோல்விக்கு பின்பு இந்திய அணி விளையாடியுள்ள அனைத்து டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் 12 தொடர்ச்சியான வெற்றிகள்:
66 ரன்கள் vs ஆஃப்கானிஸ்தான்
8 விக்கெட் vs ஸ்காட்லாந்து
9 விக்கெட் vs நமீபியா
5 விக்கெட் vs நியூசிலாந்து
7 விக்கெட் vs நியூசிலாந்து
73 ரன்கள் vs நியூசிலாந்து
6 விக்கெட் vs வெஸ்ட் இண்டீஸ்
8 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்
17 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்
62 ரன்கள் vs இலங்கை
7 விக்கெட் vs இலங்கை
6 விக்கெட் vs இலங்கை
இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்க தொடரின் முதல் டி20 போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த புதிய உலக சாதனையை படைக்க உள்ளது. தற்போது தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா,ஆஃப்கானிஸ்தான் மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இந்தப் பட்டியில் மேலும் ஒரு வெற்றி பெற்றால் இந்தியா தனியாக முதலிடத்தை எட்டிப்பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
18-member #TeamIndia squad for the upcoming five-match Paytm T20I home series against South Africa.#INDvSA @Paytm pic.twitter.com/tK90uEcMov
— BCCI (@BCCI) May 22, 2022
முன்னதாக தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்தனர். 2019ஆம் ஆண்டிற்கு பிறகு தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வரும் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் களமிறங்குகிறது. இந்தத் தென்னாப்பிரிக்கா தொடருக்கு பயோபபுள் முறை கடைபிடிக்க படாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்