(Source: Poll of Polls)
IND vs SA Womens: கனவு தகர்ந்தது.. அரையிறுதி வாய்ப்பு பறிபோனது! உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணி!
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இன்று களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிப்பெற்றால் இந்தியா அணி நிச்சயமாக அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெறும் என்ற நிலை இருந்தது.
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.
The Momentum Proteas knock India out of the Women's World Cup with a dramatic last-ball three-wicket win! pic.twitter.com/FR7wapVR6f
— SuperSport 🏆 (@SuperSportTV) March 27, 2022
இது இந்திய தரப்பில் உள்ள அனைத்து பேட்டர்களின் கூட்டு ஆட்டமாகும். ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, மிதாலி ராஜ் ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை சவாலான ஸ்கோரை எட்டினர்.
ஷஃபாலி வர்மா, இன்னிங்ஸை துவக்கி, 115 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து இந்தியாவை வலுவான நிலையில் வைத்தார். இந்திய வீரர்கள் கொடுத்த வேகமான தொடக்கத்தால் இந்திய மகளிர் அணி 15 ஓவர்களில் 91/1 என்று இருந்தது. ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா முதல் விக்கெட் பாட்னர்ஷிப் 91 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுரும் 48 ரன்களை குவித்து இறுதி கட்டத்தில் இந்தியாவுக்கு உதவினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. 275 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா பெண்கள் அணியில் தொடக்க வீரர்களாக லிசெல் லீ மற்றும் லாரா வோல்வார்ட் களமிறங்கினர். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட லிசெல் லீ 6 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து, லாரா வோல்வார்ட்டுடன் இணைந்த லாரா குடால் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். வோல்வார்ட் 80 ரன்களுடன், லாரா குடால் 49 ரன்களுடன் அவுட்டானார்கள்.
கடைசி 2 ரன்களில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தீப்தி ஷர்மா டு ப்ரீஸ்க்கு நோ பால் வீசினார். தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிக்கு 1 பந்தில் 1 தேவை என்றபோது டு ப்ரீஸ் ஆடுகளத்தில் இறங்கி மிட்-விக்கெட்டைத் தாண்டி ஒரு ரன் எடுத்து வெற்றிப்பெற செய்தார்.
🥺😖Heartbreak for India women - their journey in this World Cup ends with a final over drama, 6 to defend, a catch out turned out to be a No Ball.💔😫 pic.twitter.com/LrJsmj4PLq
— Shivam Johnson (@shivam_johnson) March 27, 2022
இந்த தோல்வியின் மூலம் இந்திய பெண்கள் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலும் இருந்து வெளியேறியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்