மேலும் அறிய

Watch video: ரன் எடுக்க பண்ட் ஓட்டம்.. கே.எல்.ராகுல் பாதி மைதானத்தில் ஆட்டம்.. தீயாய் பரவும் வைரல் வீடியோ!

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டி தொடரையும் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், பார்ல் நகரில் நடைபெற்ற முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இழந்து ஒரு நாள் தொடரையும் இழந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனை அடுத்து அதே பார்ல் மைதானத்தில் நேற்று மதியம் இரண்டாவது ஒரு நாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ராகுல், பேட்டிங் தேர்வு செய்தார். அதனை அடுத்து இந்திய பேட்டர்கள் களமிறங்கினர். சிறப்பாக தொடங்கிய இந்திய அணிக்கு, 63 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகர் தவன் அவுட்டாகினார். கடைசி போட்டியில் அரை சதம் கடந்திருந்த அவர், இந்த போட்டியில் 22 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய கோலி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், டக் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடி கொண்டிருந்த ராகுலுடன் கைக்கோத்த பண்ட், ரன்களை குவித்தார். அரை சதம் கடந்து ராகுலும் அவுட்டாக, பண்ட் மட்டும் களத்தில் நின்று 85 ரன்கள் சேர்த்தார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

Watch video: ரன் எடுக்க பண்ட் ஓட்டம்.. கே.எல்.ராகுல் பாதி மைதானத்தில் ஆட்டம்.. தீயாய் பரவும் வைரல் வீடியோ!

முதல் ஒரு நாள் போட்டியில் சொதப்பியதை போல, இந்த போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணிக்கு 6வது விக்கெட் சரியும்போது 239 ரன்கள் எட்டி இருந்தது. 250-ஐ கடக்கவே திணறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் தாகூர் ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தாகூர் 40* எடுக்க, அஷ்வின் 25* ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. 

இந்தநிலையில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பண்ட் இந்திய அணிக்காக போராடி ரன் குவித்தபோது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று அரங்கேறியது.15வது ஓவரை வீசிய கேசவ் மஹாராஜ் பந்தை  எதிர்கொண்ட பண்ட், ஒரு பந்து வீச்சை ஆன் சைடில் தொட்டுவிட்டு ரன் எடுக்கத் முயற்சி செய்தார். அப்பொழுது தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா குறுக்கே பாய்ந்து பந்தை எடுக்க ஓடினார். அதைப் பார்த்த பண்ட் ஓடாமல் கிரீஸில் நின்று கொண்டார்.

இதை அறியாமல் எதிர்முனையில் இருந்து ஓடிவந்த ராகுலும் எதிர் எதிரே சந்தித்து கொண்டு ஒரே கிரீஸில் நின்றனர்.ஆனால் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் வீசப்பட்ட த்ரோவை மஹாராஜா விட்டதால் கே.எல்.ராகுல் மீண்டும் ஓடிவந்து ரன் அவுட்டில் இருந்து தப்பித்தார். தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்ந்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டி தொடரையும் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான மாலன் 91 ரன்களுக்கு டி காக் 78 ரன்களும் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget