IND vs SA, 1st Innings Highlights: ஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா! வெளுத்து வாங்கிய தென் ஆப்ரிக்கா! 250 ரன்கள் இலக்கு
IND vs SA, 1st ODI, Ekana Sports City: இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்கா 250 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
IND vs SA 1st Oneday: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 3.45 மணிக்கு லக்னோவில் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக தாமதமாக போட்டி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்தியா தென் ஆப்ரிக்க அணிகள், இது வரை 87 போடிகளில் நேரடியாக மோதியுள்ளன. இதில் இந்திய அணி 35 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 49 போட்டிகளிலும் வென்றி பெற்றுள்ளன. மூன்று ப்போட்டிகள் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த போட்டிகளில், இந்தியாவில் நடந்த போட்டிகளில் மட்டும் இந்திய அணி 15 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல், இந்தியாவில் நடந்த போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் போட்டிங்கை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி மிகவும் நிதானமாக விளையாடி வந்தது. சீரான இடைவெளில் விக்கெட்டுகள் விழுந்து வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குயிண்டன் டி காக் அரை சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ரவி பிஷ்னாய் பந்து வீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி, 54 பந்துக்ளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
Innings Break!
— BCCI (@BCCI) October 6, 2022
South Africa post 249/4 on the board.
2⃣ wickets for @imShard
1⃣ wicket each for @imkuldeep18 & @bishnoi0056
Over to #TeamIndia batters now. 👍 👍
Scorecard ▶️ https://t.co/d65WZUUDh2 #INDvSA | @mastercardindia pic.twitter.com/QjufluMv2y
மிகவும் நிதானமாக விளையாடி வந்த தென் ஆப்ரிக்க அணி சார்பில் முதல் சிக்ஸரை ஐந்தாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேவிட் மில்லர் போட்டியின் 25 ஓவரில் அடித்தார். மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கால் ஆரம்பத்தில் தடுமாறி வந்த தென் ஆப்ரிக்க அணி அதன் பின்னர் வலுவான நிலைக்கு வந்துள்ளது.
தென் ஆப்ரிக்க அணியைப் பொறுத்தமட்டில் குயிண்டன் டி காக் 48 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும், க்லாசென் 74 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில், சர்ஹுல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் மற்றும் குல்தீப் சிங் யாதாவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர். இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்கா நிர்ணயித்துள்ளது. 40 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் விளாசியுள்ளது. ஐந்தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த மில்லர் மற்றும் க்லாசென் அதிரடியாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.