மேலும் அறிய

IND vs SA 1st ODI Match Highlights: தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா; முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

தென்னிப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முன்று வகைக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று அதாவது டிசம்பர் 17ஆம் தேதி இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இந்திய அணி பந்து வீசத் தொடங்கியது. 

இளம் இந்திய பந்து வீச்சாளர்கள் பலமான தென்னாப்பிரிக்கா அணியை என்ன செய்யவுள்ளனர் என்ற ஆவல் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பிலோ இந்திய அணிக்கு சவாலான இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கினர். ஆனால் போட்டியின் இரண்டாவது ஓவரினை வீசிய அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரின் 4வது பந்துல் ஹென்றிக்ஸையும் 5வது பந்தில் வெண்டர் டசன் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார். அப்போது தென்னாப்பிரிக்கா அணி 3 ரன்கள் சேர்த்திருந்தது. 

அதன் பின்னர் இணைந்த மார்க்ரம் மற்றும் டோனி தென்னாப்பிரிக்கா அணியை மேற்கொண்டு விக்கெட் விடாமல் கொண்டு செல்வதில் கவனமாக இருந்தனர். ஆனால் இவர்களின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 42 ரன்களாக இருந்தபோது இவர்களின் பார்ட்னர்ஷிப்பினை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 52 ரன்களாக இருந்தபோது இருந்தபோது ஹென்றிச் கிளாசன்,  தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் மற்றும் முல்டர் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 52 ரன்களில் இந்திய அணி ஹாட்ரிக் விக்கெட்டினை கைப்பற்றியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 52 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனைப் பார்த்தபோது தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களை எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. 

இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும் அவேஷ்கான் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயம் செய்த 117 ரன்கள் இலக்கினை 2 விக்கெட்டுகள் இழந்த நிலையி எட்டியது. இந்திய அணி சார்பாக தொடக்க வீரர் சாய் சுதர்சன் 43 பந்தில் 9 பவுண்டரிகள் விளாசி 55 ரன்கள் சேர்த்து விளையாடி இறுதிவரை களத்தில் இருந்தார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்ரேயஸ் ஐயர் 45 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி 52 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
"மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" மாவீரர் நாள்.. நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
"மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" மாவீரர் நாள்.. நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget