மேலும் அறிய

IND vs PAK: 36 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரோகித்... என்ன சாதனை தெரியுமா?

டி20 கேப்டனாக அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி(35),ஜடேஜா(35)மற்றும் ஹர்திக் பாண்ட்யா(33*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 

இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய கேப்டனாக அதிக வெற்றி பெற்ற பட்டியலில் ரோகித் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அத்துடன் இவர் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா தற்போது வரை 36 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அவற்றில் ரோகித் சர்மா 30 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியையும் அடைந்துள்ளார். 

டி20 கேப்டனாக அதிக வெற்றி பெற்ற வீரர்கள்:

மோர்கன் 42 வெற்றி

அஷ்கர் ஸ்டனிகசை-42 வெற்றி

தோனி 41 வெற்றி

ஃபின்ச்-35 வெற்றி

விராட் கோலி-30 வெற்றி

ரோகித் சர்மா-30 வெற்றி

கேன் வில்லியம்சன்-30 வெற்றி

சர்பராஸ் அகமது-29 வெற்றி

டேரன் சமி- 27 வெற்றி

பாபர் அசாம்-26 வெற்றி

இதன்மூலம் இந்திய கேப்டனாக விராட் கோலி பெற்ற 30 வெற்றியை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இந்திய கேப்டனாக விராட் கோலி 50 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அவற்றில் 30 வெற்றியும், 16 தோல்வி, 2 டை மற்றும் 2 முடிவில்லை. இவருடைய சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஹாங்காங் அணிக்கு எதிரான அடுத்த போட்டியை ரோகித் சர்மா வெல்லும் பட்சத்தில் கோலியின் சாதனையை முறியடித்துவிடுவார். 

முன்னதாக நேற்றைய போட்டியில் இந்தியா பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 20 ஓவரை பாகிஸ்தான் வீரர் நவாஸ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் இந்திய வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாண்ட்யா தினேஷ் கார்த்திக்கை பார்த்து நான் பார்த்து கொள்கிறேன் என்பது போல் ஒரு சைகையை காட்டினார். அதற்கு அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா அசத்தலாக சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

அதன்பின்னர் ஹர்திக் பாண்ட்யாவை பார்த்து தினேஷ் கார்த்திக் தலை வணங்கினார். இந்தப் படம் தற்போது ட்விட்டர் தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget