Ind Vs NZ Score LIVE: நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!
Ind Vs NZ Score LIVE: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
Ind Vs NZ World Cup 2023: தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 21வது லீக் போட்டியில், இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 20 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
அதில் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தென்னாப்ரிக்கா - இங்கிலாந்து மோதல்:
இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இதுவரை விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்று உலகக் கோப்பையின் மிகவும் வலுவான அணிகளாக திகழ்கின்றன. இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதை உறுதி செய்ய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பலம் & பலவீனங்கள்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே நடப்பு உலகக் கோப்பையில், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவிக்க, நட்சத்திர பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை குவிப்பதன் மூலம் இவர்களின் வெற்றிப் பயணம் தொடர்ந்து சாத்தியப்பட்டு வருகிறது.
இதனால், நடப்பு உலகக் கோப்பையில் தங்களில் யார் சிறந்த அணி என்பதை நிரூபிக்கவே, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மல்லுக்கட்ட உள்ளன. அதேநேரம், உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது இந்திய அணிக்கு சற்று கூடுதல் பலமாக கருதப்பட்டாலும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயமடைந்து இருப்பது சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 116 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 58 முறையும், நியூசிலாந்து 50 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிய, ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதோடு, அண்மைக் காலமாக ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மைதானம் எப்படி?
தர்மசாலா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இது பந்துவீச்சிற்கு சாதகமாக மாறக்கூடும். இதனால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.
உத்தேச அணி விவரங்கள்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
நியூசிலாந்து:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
Ind Vs NZ Score LIVE: இந்திய அணி வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Ind Vs NZ Score LIVE: கோலி அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் கோலி 95 ரன்னில் அவுட் ஆனார்.
Ind Vs NZ Score LIVE: 46 ஓவர்கள் முடிந்தது..!
46 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 82* மற்றும் ஜடேஜா 35* ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
Ind Vs NZ Score LIVE: 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி!
26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
Ind Vs NZ Score LIVE: 45 ஓவர்கள் முடிந்தது..!
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 245 ரன்களுடன் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் ஜடேஜா களத்தில் நிற்கின்றனர்.