Ind vs Nz ODI: மீண்டும் கில் கேப்டன்சியில் இந்தியா! கோலியின் சாதனை தொடருமா? நாளை முதல் ODI
தென்னாப்பிரிக்கத் தொடரின் 3 போட்டிகளில் 2 சதங்கள் விளாசிய கோலி, இந்தத் தொடரிலும் குறைந்தது 2 சதங்களையாவது அடித்து சாதனைப் பட்டியலை நீட்டிக்கத் தீவிரமாக உள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பிசிஏ (BCA) கிரிக்கெட் மைதானத்தில் இத்தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது.
வதோதராவின் இந்தப் புதிய மைதானத்தில் இந்திய ஆண்கள் அணி விளையாடும் முதல் சர்வதேசப் போட்டி இது என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'ROKO' மீது! அனைவரின் பார்வையும்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி காம்போ மீதே மீண்டும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் திரும்பியுள்ளது. குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எனும் வரலாற்றுச் சாதனையை நோக்கி விராட் கோலி வேகமாக முன்னேறி வருகிறார். தென்னாப்பிரிக்கத் தொடரின் 3 போட்டிகளில் 2 சதங்கள் விளாசிய கோலி, இந்தத் தொடரிலும் குறைந்தது 2 சதங்களையாவது அடித்து சாதனைப் பட்டியலை நீட்டிக்கத் தீவிரமாக உள்ளார்.
புதிய கேப்டன் தலைமையில் நியூசிலாந்து
முக்கிய வீரர்கள் பலரின் வருகை இல்லாததால், நியூசிலாந்து அணி மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் களமிறங்குகிறது.வழக்கமான கேப்டன் மிட்செல் சாண்ட்னர் இடுப்பு காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.அனுபவ வீரர் டாம் லாதம் குடும்பச் சூழ்நிலை காரணமாக நாடு திரும்பியுள்ளார்.கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற நட்சத்திர வீரர்களும் பல்வேறு காரணங்களால் அணியில் இடம் பெறவில்லை.
இருப்பினும், டெவன் கான்வே, டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால் நியூசிலாந்தின் பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது. இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் மற்றும் ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் ஆகியோர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது..
போட்டி விவரங்கள்:
-
இடம்: பிசிஏ மைதானம், வதோதரா.
-
டாஸ்: பிற்பகல் 1:00 மணி.
-
போட்டி தொடக்கம்: பிற்பகல் 1:30 மணி.
இரு அணிகளின் விவரம்:
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் (wk), ரிஷப் பந்த் (விகீ), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), டெவன் கான்வே (wk), மிட்செல் ஹே (wk), நிக் கெல்லி, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், ஜோஷ் கிளார்க்சன், ஜாக் ஃபால்க்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், ஜேடன் லெனாக்ஸ், மைக்கேல் ரே.





















