IND vs NZ, 3rd ODI:நியூசிலாந்துக்கு வெற்றி பெற 386 ரன்கள் நிர்ணயித்த இந்திய அணி; தொடக்க ஜோடி சதம் விளாசி அசத்தல்..!
IND vs NZ, 3rd ODI: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 385 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டு அதகளப்படுத்தினர். இருவரும் சதம் விளாசிய நிலையில் அவுட் ஆக, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணி தடுமாறிக் கொண்டு இருக்கும் போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசிய நிலையில் அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நியூசிலாந்து அணி எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஜேகப் டோஃபி மற்றும் டிக்னர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்த போட்டியில் 6 சிக்ஸர் விளாசியதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 273 சிக்ஸர்கள் விளாசி, அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் இதுவரை 241 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதமடித்த ரோகித்சர்மா உடனடியாக ப்ராஸ்வெல் பந்தில் போல்டானார். அவர் 85 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸருடன் சதமடித்து ஆட்டமிழந்தார். அவருடன் பேட்டிங்கில் அசத்திய சுப்மன்கில்லும் சிறிது நேரத்தில் சதமடித்து அசத்தினார். அவர் 78 பந்துகளில் 13 பவுண்டரி 5 சிக்ஸருடன் 112 ரன்கள் எடுத்து டிக்னெர் பந்தில் அவுட்டானர்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஆனால், அவர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் கடைசியாக பெங்களூரில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி கடைசியாக சதம் விளாசியிருந்தார். டெஸ்ட் போட்டியில் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021ம் ஆண்டு சதம் விளாசியிருந்தார்.
ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி 3 ஆண்டுகள் ஆகியிருந்தது அவரது ரசிகர்களுக்கும், இந்திய அணிக்கும் சற்று கடினமானதாகவே இருந்தது. மேலும், அவரது பேட்டிங் மீதும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசியுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 30வது சதத்தை விளாசி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்தார்.
மேலும், இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன்கில்லும் அபாரமாக ஆடி சதம் விளாாசியுள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியிருந்த நிலையில், இன்றைய போட்டியிலும் சதம் விளாசியுள்ளார். 23 வயதே ஆன சுப்மன்கில் ஒருநாள் போட்டியில் விளாசும் 4வது சதம் இதுவாகும். சுப்மன்கில் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதம், 1 இரட்தைட சதம், 5 அரைசதங்களுடன் 1254 ரன்களை விளாசியுள்ளார்.
இந்திய அணிக்கு சுப்மன்கில் – ரோகித்சர்மா அளித்த சிறப்பான தொடக்கத்தால் இந்திய அணி சிறப்பாக ரன்களை குவித்து வருகிறார். விராட்கோலி 36 ரன்களுக்கும், இஷான்கிஷான் 17 ரன்களுக்கும் அவுட்டாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.