Watch Video: "விராட் கோலி கிட்ட சொல்லுங்க" ரசிகைக்கு ரோகித் ஷர்மா சொன்ன பதில் என்ன?
ரோகித்சர்மாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ரசிகை விராட் கோலியிடமும் சொல்லுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் 2வது டெஸ்ட் போட்டி நாளை புனேவில் தொடங்குகிறது.
விராட் கோலியிடம் சொல்லுங்கள் ரோகித்:
இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களை பார்ப்பதற்காகவும், அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் குவிவது வழக்கம். அதுபோல, புனே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு விட்டு அறைக்குத் திரும்பிய ரோகித் சர்மாவிடம் ரசிகை ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்டார்.
Rohit Sharma's conversation with a fan:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 22, 2024
Fan - Rohit bhai, please give autograph.
Rohit - I'm coming, wait.
Fan - thank you so much, tell Virat also that his big fan came here.
Rohit - I'll tell Virat. 😄❤️pic.twitter.com/q0fUWHtcWm
அவரும் அந்த ரசிகைக்கு ஆட்டோகிராஃப் இட்டுத் தந்தார். பின்னர், அந்த ரசிகை ரோகித்சர்மாவிடம், “மிக்க நன்றி. விராட் கோலியிடமும் சொல்லுங்கள். அவரின் மிகப்பெரிய ரசிகை வந்துள்ளேன் என்று சொல்லுங்கள” என்றார். அதைக்கேட்ட ரோகித்சர்மா “நான் விராட் கோலியிடம் சொல்கிறேன்” என்றார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீவிர பயிற்சியில் இந்தியா:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் கேப்டனுமாகிய முறையே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஆவார்கள். டி20 போட்டியில் இருந்து இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் 3 வெற்றிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெ்றறியை இழந்தது. இதன்பிறகு ஆடும் ஆஸ்திரேலிய தொடர் மிக சவாலானதாக இருக்கும் என்பதால் இந்த தொடரின் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.