Ind vs NZ- 2nd T20, 1st Innings Highlight: ஆர்ப்பரித்த வெள்ளத்தை அணை போட்டு தடுத்த இந்தியா: 154 ரன்கள் இலக்கு!
பவர்ப்ளே முடிவதற்குள் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. ரன் ரேட் 10+ என அதிரடி காட்டி இருந்தது. ஆனால், 10 ஓவர்களுக்கு பிறகு ஆட்டம் ஸ்லோவானது.
உலககோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில், 2021 ஐபிஎல் தொடர் பர்பிள் கேப் வின்னர், ஹர்ஷல் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அறிமுகத்திற்கான இந்திய அணி தொப்பியை முன்னாள் இந்திய அணி வீரர் அஜீத் அகார்கரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
🎥 🎥 Congratulations to @HarshalPatel23 who is set to make his #TeamIndia debut. 👏 👏@Paytm #INDvNZ pic.twitter.com/n9IIPXFJQ7
— BCCI (@BCCI) November 19, 2021
அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்துக்கு, ஓப்பனர்கள் குப்தில், டேரில் மிட்சல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். பவர்ப்ளே முடிவதற்குள் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. ரன் ரேட் 10+ என அதிரடி காட்டி இருந்தது. தீபக் சஹார் வீசிய ஓவரில், குப்தில் அவுட்டாகி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு பிறகு அடுத்து சேர்ந்த ஒவ்வொரு 20 ரன்களுக்கும் விக்கெட்டுகள் சரிந்தது. வரிசையாக, அடுத்த மூன்று விக்கெட்டுகள் சரிந்தாலும், இன்னொரு புறம் ரன் ஏறிக்கொண்டே இருந்தது.
இந்திய அணியைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும், அக்சர், அஷ்வின், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.
மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா சேஸ் செய்யும் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை இழந்து இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியையும் இழந்திருக்கும் நியூசிலாந்து, இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடும். அந்த முனைப்பில் முதல் இன்னிங்ஸை முடித்திருக்கும் நியூசிலாந்து, டார்கெட்டை டிஃபெண்ட் செய்யுமா என்பதை அடுத்த இன்னிங்ஸில் பார்ப்போம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்