IND vs NAM: அஷ்வின், ஜடேஜாவின் சுழலில் சிக்கிய நமீபியா ; வெற்றி பெற இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு!
இந்தியா- நமீபியா ஆட்டத்துடன் உலககோப்பை சூப்பர் 12 சுற்றின் ஆட்டம் முடிவடைகிறது. அரையிறுதியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்து வென்றதன் மூலம் உலககோப்பை டி20 ஆட்டம் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்றைய வெற்றி மூலம் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதனால், உலககோப்பையில் ரன்ரேட் மூலம் அரையிறுதிக்குள் நுழையலாம் என்று இந்திய அணி போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.
இந்நிலையில், சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - நமீபியா அணிகள் இன்று மோதின. இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றிய இரு ஆட்டங்கள் நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில்தான் இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய கேப்டன் விராட்கோலி இந்த தொடருக்கு முன்னதாக, டி20 உலககோப்பையுடன் டி20 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், டி20 ஆட்டங்களில் கேப்டனாக கோலிக்கு இது கடைசி போட்டி. இதனால், கோலியை வெற்றியுடன் கேப்டன்சியில் இருந்து விடைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி.
சுழலில் சிக்கிய நமீபியா:
#Namibia had no answers for the #India spin duo of Ashwin and Jadejahttps://t.co/ZylfYHuOpp | #INDvNAM | #T20WorldCup pic.twitter.com/x9roui28xe
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 8, 2021
ஓப்பனிங் களமிறங்கிய நமீபியா பேட்டர்கள், நிதானமாக தொடங்கினர். ஆனால், ஷமி பவுலிங்கில் முதல் விக்கெட்டை இழந்த நமீபியா பேட்டர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக, ஜடேஜா, அஷ்வின் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகள் சரிந்தன. 16 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், 100 ரன்களை எட்டி இருந்த நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால், முழுமையாக 20 ஓவர்கள் விளையாடுவார்களா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை களத்தில் நின்ற நமீபியா வீரர்கள், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி வெற்றி பெற 133 ரன்கள் தேவை.
இந்தியா- நமீபியா ஆட்டத்துடன் உலககோப்பை சூப்பர் 12 சுற்றின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த போட்டியுடன் உலககோப்பை தொடரில் குரூப் 1-ல் தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், குரூப் 2-ல் இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் வெளியேறுகிறது. அரையிறுதியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்