(Source: ECI/ABP News/ABP Majha)
INDvsENG: முதல் டி20 போட்டி டாஸ் வென்று இந்தியா பேட்டிங்.. அணிக்கு திரும்பிய கேப்டன் ரோகித் சர்மா
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் இன்று டி20 தொடர் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி சவுதாம்டன் நகரில் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அர்ஷ்தீப் சிங் தன்னுடைய அறிமுக டி20 போட்டியில் களமிறங்குகிறார். அவருக்கு அறிமுக வீரருக்கான தொப்பியை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன்,சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்,அக்ஷர் பட்டேல்,ஹர்ஷல் பட்டேல்,புவனேஸ்வர் குமார்,சாஹல்,அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Congratulations to @arshdeepsinghh who is all set to make his T20I debut for #TeamIndia
— BCCI (@BCCI) July 7, 2022
He receives his cap from Captain @ImRo45#ENGvIND pic.twitter.com/2YOY15GwRj
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டி20 அணியின் முழுநேர கேப்டனாக பட்லர் முதல் முறையாக களமிறங்குகிறார். இங்கிலாந்து அணிக்கு சாம் கரன், மொயின் அலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் இந்தியா:
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 2 வெற்றி மற்றும் 4 தோல்வி அடைந்துள்ளது.
சவுதாம்டனில் இந்தியா:
சவுதாம்டன் மைதானத்தில் இந்தியா 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் ஒன்றில் கூட இந்திய வெற்றி பெறவில்லை. ஆகவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்தியா:
இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. கடந்த டிசம்பர் மாதம் முதல் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அவற்றில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்