மேலும் அறிய

IND vs ENG Test: ”இந்திய மைதானங்கள், நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்” - இங்கிலாந்து துணை கேப்டன் போப் விளக்கம்

IND vs ENG Test: டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடுகளங்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் குறைசொல்ல மாட்டோம் என, இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

IND vs ENG Test: டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடுகளங்கள் தொடர்பாக, இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

இந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, முதல் இரண்டு போட்டிகளுக்காக ரோகித் சர்மா தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய மைதானங்கள் யாருக்கு சாதகமாக அமைக்கப்படும் என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஆச்சரியமில்லை - ஒல்லி போப்:

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான பயிற்சிக்காக அபுதாபிக்கு புறப்படும் முன்பு, இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, “இந்தியா தொடரில் ஆடுகளத்திற்கு வெளியில் இருந்து ரசிகர்களால் அதிக சத்தம் இருக்கும். ஆடுகளங்கள் ஒரு பெரிய பேசும் புள்ளியாக இருக்கலாம். ஆனால் இரண்டு அணிகளும் ஒரே விக்கெட்டில் விளையாடுவதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாங்கள் எங்களால் முடிந்தவரை அந்த சூழலுக்கு தயாராக வேண்டும். இங்கிலாந்தில், நாங்கள் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தில் அதிக புற்களை விட்டுவிடுவோம். எனவே இந்தியாவும் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்த அமைப்பதில் ஆச்சரியமில்லை. குறைந்த ஸ்கோர்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

”நாங்க குறை சொல்ல மாட்டோம்”

தென்னாப்பிரிக்கா - இந்தியா டெஸ்ட் போட்டியை பார்த்தேன். அது அருமையாக இருந்தது. வீரர்கள் கடுமையாக போராடி ரன்களை சேர்த்தனர். இதேபோன்ற சூழலை தான் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். ஆனால் முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும்,  நாங்கள் எந்த குறையும் சொல்லமாட்டாம்.  அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முறையைக் கண்டுபிடிக்க முயற்செய்வோம்” ஒல்லி போப் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டே நாட்களில் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா, “வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரம், இந்தியாவிற்கு வருகை தரும் அணிகள் அங்குள்ள ஆடுகளங்களை மட்டும் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:

தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில்,ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆவேஷ் கான்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
Embed widget