watch video : அப்பப்பா...! வேற லெவல் கேட்ச்! 2 முறை நழுவிய இங்கி கேப்டனை காலி செய்த இந்திய கேப்டன்.!
இங்கிலாந்து கேப்டன் 2 முறை கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டு, இந்திய கேப்டன் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஜோ ரூட், ஒல்லி போப், அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் ஜானி பார்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார். ஜானி பார்ஸ்டோ அதிரடியாக ஆட ஆரம்பிக்க அவருக்கு ஒத்துழைப்பு அளித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சும் அதிரடியாக ஆடினார்.
ஷமி பந்தில் பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்த பென்ஸ்டோக்ஸ் விளாசிய பந்து, பேட்டில் பட்டு ஷர்துல் தாக்கூர் கைக்கு மிகவும் எளிதான கேட்ச்சாக வந்தது. ஆனால், அவர் மிகவும் எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். இதையடுத்து, ஆட்டத்தின் 38வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அவர் வீசிய 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த எளிதான கேட்ச்சை இந்திய கேப்டன் பும்ரா கோட்டைவிட்டார்.
A pretty special catch. It's been an enthralling morning.
— England Cricket (@englandcricket) July 3, 2022
Scorecard/Videos: https://t.co/jKoipF4U01
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/wBr6gvOD6x
இரண்டு வாய்ப்புகளை இந்திய வீரர்கள் கோட்டைவிட்டதால் பென் ஸ்டோக்ஸ் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்பினர். ஆனால், அதற்கு அடுத்த பந்திலே ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த கடினமான கேட்ச்சை இந்திய கேப்டன் பும்ரா அற்புதமாக பிடித்து அவரை அவுட்டாக்கினார். பென்ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
இங்கிலாந்து கேப்டனான பென் ஸ்டோக்ஸ் மிகவும் அபாயகரமான ஆல் ரவுண்டர். குறிப்பாக, களத்தில் பேட்டிங்கில் அவர் நீண்ட நேரம் நின்றுவிட்டால் டி20 போட்டி போல டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வல்லமை கொண்டவர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்ததால் இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்