மேலும் அறிய
Advertisement
IND vs ENG 5th Test DAY 1 Highlights: 218 ரன்களில் சுருண்ட இங்., இந்திய ஸ்பின்னர்கள் விக்கெட் வேட்டை; சாதனைகள் படைத்த ஜெய்ஸ்வால்
IND vs ENG 5th Test DAY 1 Highlights: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் குறித்து இங்கு காணலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வுகளை இங்கு காணலாம்.
- இந்த போட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோவ் ஆகியோருக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும்.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
- முதல் விக்கெட்டினை 64 ரன்களுக்கு இங்கிலாந்து அணி இழந்தது. அந்த விக்கெட்டினை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
- இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
- இவர்களில் ஜாக் கார்வ்லி மட்டும் 79 ரன்கள் சேர்த்திருந்தார். இங்கிலாந்து அணியில் இந்த இன்னிங்ஸில் அதிக ரன்குவித்த வீரர் இவர் மட்டும்தான்.
- அணியின் ஸ்கோர் 175 ரன்களாக இருந்தபோது இங்கிலாந்து அணியின் பேரிஸ்டோவ் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார்.
- இங்கிலாந்து அணி 175 ரன்னில் தனது அடுத்த விக்கெட்டினையும் இழந்தது. ஜடேஜா பந்தில் ஜோ ரூட் தனது விக்கெடினை இழந்து வெளியேறினார்.
- அதன் பின்னர் வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 175 ரன்களில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
- அதன் பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடங்கி டைல் எண்டர்கள் வரை அஸ்வின் வீழ்த்தினார். குறிப்பாக பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்டினை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அஸ்வின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்தில் இங்கிலாந்து அணியின் ஜாக் கார்வ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், பேரிஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என மொத்தம் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
- அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா 52 ரன்களுடனும் சுப்மன் கில் 26 ரன்களுடனும் உள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 83 ரன்கள் பின்தங்கியுள்ளது.
- ஜெய்ஸ்வால் 57 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார். முதல் டெஸ்ட்டில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் இரண்டாவது டெஸ்ட்டில் இரைட்டைச் சதம் விளாசி அசத்தினார். மூன்றாவது டெஸ்ட்டிலும் இரைட்டைச் சதம் விளாசி இங்கிலாந்து அணி தலைவலியாகவே மாறினார். நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டில் அரைசதம் விளாசி மிரட்டிவிட்டுள்ளார். இதன் மூலம் ஐந்து போட்டிகளிலும் அரைசதம் மற்றும் அதற்கு மேல் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion