மேலும் அறிய

IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்... கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்ஸை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவ் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. பின்னர் இந்திய அணி களம் இறங்கியது.

இதில், இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 180 பந்துகளில் 87 ரன்களும், கே.எல்.ராகுல் 123 பந்துகளில் 86 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 436 ரன்களை குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் படி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ஓவர்கள் முடிவின் படி 316 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப் அதியரடியாக விளையாடி 148 ரன்களை எடுத்துள்ளார்.

கபில் தேவ் சாதனையை சமன் செய்த அஸ்வின்:

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்ஸை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்தார்.

அந்த சாதனை என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில்  25-வது இன்னிங்ஸ்களில் ஸ்டோக்ஸ்ஸிற்கு எதிராக பந்துவீசியுள்ள அஸவின் அவரை 12 ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார். மேலும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட வீரரை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த கபில் தேவை அவர் சமன் செய்துள்ளார். முன்னதாக, இந்திய வீரர் கபில் தேவ் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முடாசர் நாசரை 12 முறை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அஸ்வின் பென் ஸ்டோக்ஸை 12 வது முறையாக வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க: IND vs ENG Test: ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்திய பவுலர்கள்; டஃப் கொடுத்த போப் சதம்; இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை

மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget