IND vs ENG 1st ODI:மளமளவென விழுந்த 8 விக்கெட்டுகள்! 4 பேரை டக் அவுட்டாக்கிய பும்ரா...! இங்கி. மிரட்டும் இந்தியா..!
IND vs ENG : பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 83 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி லண்டன் மாநகரில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, இங்கிலாந்தின் ஆட்டத்தை ஜேசன் ராய் மற்றும் ஜானி பார்ஸ்டோ தொடங்கினர்.
What a start this has been for #TeamIndia.
— BCCI (@BCCI) July 12, 2022
Four wickets for @Jaspritbumrah93 and a wicket for @MdShami11. Four of the five batters depart for a 🦆#TeamIndia bowlers are on 🔥🔥🔥
Live - https://t.co/rjByVBo0gW #ENGvIND pic.twitter.com/z23ThkjOdL
தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜேசன் ராய் இந்த போட்டியிலும் தடுமாறினார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே பும்ராவின் பந்தில் ஜேசன் ராய் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் களமிறங்கினார். பும்ரா வீசிய அதே ஓவரில் ஜோ ரூட் 2 பந்துகளே சந்தித்த நிலையில் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் ஜானி பார்ஸ்டோ – பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை பல போட்டிகளில் சிறப்பாக ஆடிய கூட்டணி என்பதால், ஆட்டத்தை இங்கிலாந்து வசம் கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஷமி அதிர்ச்சி அளித்தார். அவரது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் முதல் பந்திலே ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் டக் அவுட்டாகி வெளியேறிய சூழலில் கேப்டன் பட்லர் களமிறங்கினார்.
England have lost half their side inside eight overs 😯#ENGvIND | https://t.co/62zyAmdxVs pic.twitter.com/nW7Fz58Ddt
— ICC (@ICC) July 12, 2022
அவருடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ஜானி பார்ஸ்டோ கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்த முறை பும்ரா அதிர்ச்சி தந்தார். தொடக்கம் முதல் நிதானமாக ஆடிய பார்ஸ்டோ 20 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும், லிவிங்ஸ்டனும் இணைந்தனர். ஆனால், அந்தக் கூட்டணியையும் பும்ரா காலி செய்தார். அவரது பந்தில் லிவிங்ஸ்டன் 0 ரன்களுக்கு ஸ்டம்பை பறிகொடுத்தார். 8 விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து தவித்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்