IND vs BAN Test Day 1: முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 278 ரன்கள் குவிப்பு; புஜாரா, ஸ்ரேயஸ் அபாரம்..!
IND vs BAN Test Day 1: இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.
IND vs BAN Test Day 1: இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இன்று தொடங்கிய முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும் நடைபெறவுள்ளது.அதேபோல், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் உள்ள தேசிய மைதானத்தில் டிசம்பர் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது.
ஆரம்பமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...
இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 41 ரன்களாக இருந்தபோது, சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து, அணியின் ஸ்கோர் 45 ரன்களாக இருந்தபோது கே.எல். ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அணியின் ஸ்கோர் 48 ரன்களாக இருந்த போது விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
Stumps on Day 1⃣ of the first #BANvIND Test!@ShreyasIyer15 remains unbeaten on 8⃣2⃣* as #TeamIndia reach 278/6 at the end of day's play 👌
— BCCI (@BCCI) December 14, 2022
Scorecard ▶️ https://t.co/CVZ44N7IRe pic.twitter.com/muGIlGUbNE
இந்த சர்வில் இருந்து மீளுமா என நினைத்துக் கொண்டு இருக்கையில் ரிஷ்ப் பண்ட் மற்றும் புஜாரா கூட்டணி அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டது. அதன் பின்னர், அணியின் ஸ்கோர் 112 ரன்களாக இருந்தபோது அதிரடியாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 45 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழ்ந்தார். இதன் பின்னர், புஜாராவுடன் கைகோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர்கள் கூட்டணி தொடர்ந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றது. இதன்பின்னர், அணியின் ஸ்கோர் 261 ரன்களாக இருந்த போது 203 பந்தில் 90 ரன்கள் குவித்து சதத்தினை நெருங்கிக்கொண்டு இருந்த புஜாரா எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய அக்ஷ்ர் பட்டேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் 169 பந்தில், 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.