IND vs AUS WTC Final: நோ பாலில் விக்கெட் எடுத்துவிட்டு துள்ளிக்குதித்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. வைரலாகும் வீடியோ..!
WTC Final 2023: ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் ஆட்டமிழந்த பந்து நோ பாலாக அமைந்தததால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரக்தி அடைந்தனர்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டத்திற்குப் பிறகு, இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணியின் கரங்களே உயர்ந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
அதன் பின்னர் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை ரஹானேவும் ஜடேஜாவும் மீட்டனர். அதிலும் அதிரடியாக ஆடி வந்த ஜடேஜா பவுண்டரிகளை விரட்டி வந்தார்.
நோ பால்:
இரண்டாவது நாளின் 22வது ஓவரின் கடைசி பந்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்தது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ரஹானேவின் பேட்டில் படாமல் பேடில் பட்டது. இதனால் களநடுவர் அவுட் கொடுக்க ரஹானே மேல் முறையீட்டிற்கு சென்றார். மேல் முறையீட்டில் நோபால் என கூறப்பட்டதும் இந்திய அணிக்கு நிம்மதியாக இருந்தது.
அப்போது, ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா கூட்டணியின் மூலம் இந்தியா 87/4 என்று இருந்தது. இருவரும் இறுதியில் 100 பந்துகளில் 71 ரன்களைச் சேர்த்து, இந்தப் போட்டியில் இந்தியாவின் அதுவரையிலான சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
View this post on Instagram
அதன் பின்னர் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பரத் தனது விக்கெட்டை 5 ரன்னில் இழக்க, அதன் பின்னர் வந்த ஷர்துல் தாக்கூர் சிறப்பாக ஆடினார். இவர்களது கூட்டணியில் இந்திய அணி சிறப்பாக மெல்ல மெல்ல மீண்டு வந்தது. போட்டியின் 60வது ஓவரில் ஷர்துல் தாக்கூரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கொண்டாட்டத்தில் இருந்தது. ஆனால் ரிவ்யூவில் அவர் இந்த பந்தும் நோபாலாக வீசியது கண்டறியப்பட்டது. அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் சேர்த்திருந்தது. ஷர்துல் தக்கூர் 36 ரன்னில் இருந்தார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக இருவர் மட்டும் தான் அரைசதம் விளாசினர். இதில் இவர்கள் இருவரும் எல்.பி.டபள்யூ முறையில் ஆஸ்திரேலிய கேப்டனில் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்ததாக கருதப்பட்டு பின்னர், ரிவ்யூவில் நோ-பால் கண்டறியப்பட்ட பின்னர் தான் அரைசதம் விளாசினர்.
View this post on Instagram