IND vs AUS Test: ஜாலியாக ஒரு டெஸ்ட்... பிரதமர் மோடியுடன் பார்க்க இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்... என்னைக்கு தெரியுமா?
மறு புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு தனது பெயர் சூட்டப்பட்ட பிறகு இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி பிறகு, பார்வையிடும் முதல் போட்டி இதுவாகும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - காவஸ்கர் டிராபியின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 ம் தேதி தொடங்கி 13 வரை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸும் நேரில் ஒன்றாக அமர்ந்து பார்வையிட போவதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
மறு புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு தனது பெயர் சூட்டப்பட்ட பிறகு இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி பிறகு, பார்வையிடும் முதல் போட்டி இதுவாகும்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை நடைபெற இருக்கிறது.
ஆஸ்திரேலியா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்திற்கான 17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அறிவிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இஷான் கிஷனும், இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார்யாதவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முதுகு காயத்திலிருந்து தற்போது மீண்டு வருவதால் இந்திய அணியில் இடம்பெறவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜெய்தேவ் உனட்கட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023:
டெஸ்ட் தொடர்:
பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்
ஒருநாள் தொடர்:
மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
குறிப்பு: ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.
இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் ஆஸி., அணி 78.57 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேசமயம் 2வது இடம் வகிக்கும் இந்திய அணி (58.93 புள்ளிகள்) வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் ஆஸ்திரேலியாவின் புள்ளி மதிப்பு 59.6 ஆக குறையும். இந்தியாவின் புள்ளி மதிப்பு 68.05 ஆக உயரும்.
இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?
அதேசமயம் இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் 61.11 புள்ளி மதிப்பைப் பெறும்.
4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா 48.72 புள்ளி மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும். இந்த அணிகளுக்கு சமமாக திகழும்.
ஒருவேளை இந்திய அணி 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 45.4 ஆக குறையும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால் 51.39 ஆகவும், இரண்டில் வெற்றி பெற்றால் 56.9 ஆகவும், மூன்று போட்டிகளில் வென்றால் 62.5 ஆகவும் புள்ளிகள் மதிப்பு இருக்கும். ஆனால் குறைந்தது 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.