Ind vs Aus: இன்று களமிறங்கும் Ro-Ko.. குறுக்கே கட்டையை போடும் மழை.. பெர்த்தில் போட்டி நடைபெறுமா?
ஒருவேளை மழையின் காரணமாக போட்டி நடைபெறாமல் போனால் நீண்ட நாட்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை மைதானத்தில் காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இப்போட்டி மழையினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய தொடர்:
இந்திய அணிஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்க உள்ள நிலையில் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மழைக்கு வாய்ப்பு;
இந்நிலையில் இப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அதன்படி போட்டி நடைபெறும் பெர்த் நகரில் 70% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போட்டி தொடங்கி நடந்தாலும் அடிக்கடி மழையின் குறுக்கீடு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை மழையின் காரணமாக போட்டி நடைபெறாமல் போனால் நீண்ட நாட்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை மைதானத்தில் காண காத்திருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைவார்கள்
நேருக்கு நேர்:
இவ்விருஅணிகளும் இதற்கு முன்னர் 154 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன இதில் ஆஸ்திரேலியாவின் கைகளே ஓங்கியுள்ளது, ஆஸ்திரேலியா 84 போட்டிகளிலும் இந்திய அணி 58 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 70 இன்னிங்ஸ்களில் 3077 ரன்களும், அதற்கு அடுத்தபடியாக 48 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 2451 ரன்களும், ரோகித் சர்மா 46 இன்னிங்ஸ்களில் 2407 ரன்களும் அடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் பிரட் லீ 55 விக்கெட்டுகளும், கபில் தேவ் 45 விக்கெட்டுகளும், மிட்செல் ஜான்சன் 43 ரன்கள் எடுத்துள்ளனர்
இந்திய அணி:
ரோகித் சர்மா, சுப்மன்கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், நிதிஷ் ரெட்டி, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்.
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ் ( கேப்டன்), ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் ( விக்கெட் கீப்பர், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், லபுஷேனே, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், பார்ட்லெட், மேத்யூ ஹுனேமேன், ஹேசல்வுட்





















