Ashwin Mankad Viral : அஸ்வினின் மன்கட் முயற்சி; விராட் கோலியின் க்யூட் ரியாக்ஷன்; வைரல் வீடியோ!
Ashwin Mankad Viral: ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான போட்டியில் மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சி செய்த அஸ்வின் செயலுக்கு கை தட்டி சிரித்த விராட் கோலியின் வீடியோ வைராலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர், முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்றதும் அவரின் சாதனைகளுடன் ‘ மன்கட் அவுட்’ என்ற வார்த்தையும் கூடவே நம் நினைவுக்கு வரும். பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், இடையே ரசிகர்கள் சிரிக்கும் அளவிலான ஒரு நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மன்கட் க்யூட் மொமண்ட்:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதன் இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா 68 ரன்னுக்கு 2 விக்கெட் எடுத்திருந்தது. களத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் marnus labuschagne இருவரும் இருந்தனர்.
அஸ்வின் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஸ்ட்ரைக்கர் என்டில் marnus labuschagne -ங்கும் நான் -ஸ்ட்ரைக்கர் என்டில் ஸ்டீவ் ஸ்மித் இருந்தனர்.
15 -வது ஓவரில் அஸ்வின் பந்தை டெலிவரி செய்யும் முன்பு, ஸ்டீவி ஸ்மித் க்ரீஸ் லைனை விட்டு வெளியே இருப்பதை உணர்ந்த அஸ்வின், பந்தை டெலிவரி செய்வதை நிறுத்தி விட்டு, மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சி செய்தார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் க்ரீஸ்குள் சேஃபாக இருந்தார். அஸ்வின் சிரித்தார்.
வீடிவோ:
Ashwin again 😂👌. Look at Virat Kohli and Steve Smith #INDvAUS pic.twitter.com/OsOCQseqwJ
— Nitish Tiwary (@TiwaryT21821046) February 19, 2023
இதில் என்ன ஹைலைட் என்றால், இதைப் பார்த்த விராட் கோலி, கைதட்டி விளையாட்டுத்தனமாக சிரித்தார். மன்கட் முயற்சிக்கு விராட் கோலியின் இந்த ரியாக்ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.
பலரும், இதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ‘பரபரப்பான ஆட்டத்தில் நடுவே செம லைட் மொமண்ட் இது.’ என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய போட்டி ஒரு ட்ரீட்:
மிரட்டிய ஜடேஜா:
அவரது முயற்சிக்கு கை மேல் பலன் கிட்டியது. ஆட்டம் தொடங்கியவுடன் ட்ராவிஸ் ஹெட் 43 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்க, லபுசேனே 35 ரன்களில் அவுட்டானார். கடந்த இன்னிங்சில் அசத்திய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்சை ஜடேஜா டக் அவுட்டாக்க, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கோல்டன் டக் அவுட்டாக்கினர். அடுத்து வந்த நாதன் லயன் 8 ரன்களிலும், குகென்மனை டக் அவுட்டாக்கியும் ஜடேஜா அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல தனது சுழலால் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல சறுக்கினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணிக்கு ஹிமாலய இலக்கை நிர்ணயிக்கலாம் என்ற எண்ணத்தை ஜடேஜா தூள் தூளாக்கினார்.