(Source: Poll of Polls)
IND vs AUS: 4-வது டெஸ்ட்டை காணவரும் இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள்.. அன்றைய முழு நாளும் இங்கேதானாம்..!
4வது டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பார்க்கின்றனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. 4வது டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பார்க்கின்றனர்.
மார்ச் 8 ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், நாளை அகமதபாத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் போட்டியை காண்கிறார்.
கடந்த 2021 ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டத்தில் இருந்து இங்கு இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இண்ட் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
புதிய சாதனை படைக்கவிருக்கும் மைதானம்:
முதல் நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் டெஸ்ட் போட்டியைக் காண வரலாம் என அறிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம், இதற்கு முன், எந்த ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஸ்டேடியத்தை அடைந்த அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கை 91,112 ஆகும். இதன் மூலம் அகமதாபாத் டெஸ்ட் பார்வையாளர்களின் அடிப்படையில் புதிய சாதனையை படைக்க முடியும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
பார்டர்- கவாஸ்கர் டிராபி தொடரில் தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாக்பூர் மற்றும் டெல்லி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முன்னிலை வகித்தனர்.
இருப்பினும், இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற சாதனையை படைத்தது. இருப்பினும், அகமதாபாத் டெஸ்டில் வெல்வதன் மூலம் தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
முகமது ஷமிக்கு வாய்ப்பா?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசியாக இந்தூர் டெஸ்டில் விளையாடவில்லை. ஆனால், நாளை நடைபெறும் அகமதாபாத் டெஸ்டில் ஷமி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமி திரும்பினால், முகமது சிராஜ் வெளியே உட்கார வேண்டியிருக்கும்.
இந்த போட்டியில், இஷான் கிஷன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கலாம். அகமதாபாத் டெஸ்டில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டால், கே.எஸ்.பாரத் வெளியே உட்கார வேண்டியிருக்கும். நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அறிமுகமான கே.எஸ். பாரத் எதிர்பார்த்தபடி பெரியளவில் ஜொலிக்க வில்லை.