IND vs AUS LIVE Score: அபாரம்.. ஆஸ்திரேலியாவுக்கு பரிதாபம்! இந்தியா மிரட்டல் வெற்றி
India vs Australia Live Score, World Cup 2023: இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி குறித்து அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்த மைதானம் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை கங்காரு அணி மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த 6 போட்டிகளில், மூன்று போட்டிகள் 1987 மற்றும் 1996 உலகக் கோப்பையின் போது விளையாடப்பட்டன. மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இங்கே 1987 உலகக் கோப்பையில், இந்த அணியும் இந்தியாவிடம் குரூப் ஸ்டேஜில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் தோல்வியைக் கொடுத்தது.
மாறாக, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த சொந்த மைதானத்தில் இந்தியாவுக்கு அதிக நன்மை கிடைக்கவில்லை. இந்த மைதானத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 7ல் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இங்கு இந்தியா விளையாடிய போட்டி ஒன்றில் முடிவு இல்லை. அதாவது இங்கு இந்தியாவின் வெற்றி சதவீதம் 50 ஆக மட்டுமே உள்ளது, இது ஆஸ்திரேலியாவின் 83% வெற்றியை விட மிகக் குறைவு. இந்தநிலையில், இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
ICC WC 2023 IND vs AUS LIVE Score: புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
உலகக் கோப்பை 2023 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.
ICC WC 2023 IND vs AUS LIVE Score: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த 3வது வீரர்
உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கே.எல் ராகுல்
1. ஷிகர் தவான் - 2019 - 117 ரன்கள்
2. அஜய் ஜடேஜா - 1999 - 100 ரன்கள்
3. கே.எல். ராகுல் - 2023 - 97 ரன்கள்
ICC WC 2023 IND vs AUS LIVE Score: சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி..
ஐசிசி நடத்தக்கூடிய டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் போட்டி என அனைத்திலும் சேர்த்து விராட் கோலி தற்போது 2 ஆயிரத்து 785 ரன்கள் விளாசியுள்ளார். இது சச்சின் இதற்கு முன்னர் படைத்திருந்த சாதனையான 2 ஆயிரத்து 719 ரன்களை முறியடித்துள்ளார்.
ICC WC 2023 IND vs AUS LIVE Score: சதத்தை தவறவிட்டாலும் சாதனையை தவறவிடாத விராட்
விராட் கோலி தனது சதத்தை தவற விட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இல்லாமல் அதிக அரைசதங்கள் விளாசியவர் என்ற பட்டியலில் விராட்கோலிதான் முதல் இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 113 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
ICC WC 2023 IND vs AUS LIVE Score: சாதனை படைத்து வரும் இந்தியா
தொடர்ந்து 4 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அதாவது 2007 முதல் 2023 வரை தனது முதல் போட்டியில் வெற்றியுடந்தான் தொடங்கியுள்ளது.