IND vs AUS: இவர்கள் இனி வெளியே! 2வது டெஸ்டில் மாற்றங்கள் தேவை.. முக்கிய வீரர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா!
வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி டெல்லியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வித்தியாசமான உத்தியை வகுத்து வருகிறது.
பார்டர் - கவாஸ்கர் டிராபி 2023 லில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாட் மர்பி மட்டுமே 7 விக்கெட்களை எடுத்து நம்பிக்கை அளித்த நிலையில், அணியின் அனைத்து பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் பேட் கம்மின்ஸ், நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் உள்ளிட்ட இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இருப்பினும், அந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லை.
வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி டெல்லியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வித்தியாசமான உத்தியை வகுத்து வருகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் என இரண்டு பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஸ்டார்க் அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளராகவும், கேமரூன் கிரீன் சிறந்த ஆல்ரவுண்டர் ஆட்டத்தை அணிக்காக பங்களிப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் வெளியேற்றப்படுவார்கள்..?
நாக்பூர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இருந்த மாட் ரென்ஷாவுக்கு பதிலாக கேமரூன் கிரீன் அணியில் இடம் பெறுவார். அந்த போட்டியில், மாட் ரென்ஷா முதல் இன்னிங்சில் 0 ரன் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்சிலும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அத்தகைய சூழ்நிலையில், கேமரூன் கிரீன் அவருக்கு பதிலாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. கிரீன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர். இருப்பினும் காயத்திலிருந்து கிரீன் மீண்டு வந்ததால் பந்துவீசுவாரா? இல்லையா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது தவிர அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டிற்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வளிக்கப்படலாம். அவருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பெறுவார். ஸ்டார்க் அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர். நாக்பூர் டெஸ்டில் விளையாடும் போது ஸ்காட் போலண்ட் சிறப்பாக செயல்படவில்லை. மேலும், அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திலிருந்து மீண்ட ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல் , குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன்