மேலும் அறிய

IND vs AUS: பார்டர்- கவாஸ்கர் டிராபியில் இனி 4 போட்டிகள் இல்லை... பிசிசிஐ கொடுத்த புது அப்டேட்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடர் இந்தியாவின் நான்கு வெவ்வேறு இடங்களில் இந்தாண்டு விளையாடப்பட இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு, இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறது. இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் பிஸியாக இருக்கும் இந்திய அணி, இந்த தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. 

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்டர்-கவாஸ்கர் டிராபி 2023ன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அதனை தொடர்ந்து, மேலும் மிகப்பெரிய அப்டேட் ஒன்றையும் பிசிசிஐ வழங்கியது. 

பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடர் இந்தியாவின் நான்கு வெவ்வேறு இடங்களில் இந்தாண்டு விளையாடப்பட இருக்கிறது. நாக்பூரில் உள்ள ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 9 முதல் 13 வரை முதல் டெஸ்ட் போட்டியும், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 1 முதல் 5 வரையிலும், நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9 முதல் 13 வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், இந்த தொடர் முடிந்ததும் 2023-27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்களின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் (FTP) படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்களை பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக விளையாடும் என்றும், இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 2023-25 வரையிலான சுழற்சி முறையில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும். அதன்பிறகு, 2025-27 வரையிலான சுழற்சி முறையில் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கின்றன. 

இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் 4 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி பதிப்பாக இதுவே இருக்கும். இதன்பிறகு நடைபெற இருக்கும் அனைத்து போட்டிகளுக்கும் இதுக்கு பிறகு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகவும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. 

குறிப்பிடத்தக்க வகையில், 2003/04 முதல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்ததிலிருந்து 4 போட்டியாகவே இருந்து வருகிறது. கடந்த 2010/11 ம் ஆண்டு மட்டுமே பார்டர்-கவாஸ்கர் தொடரானது 2 போட்டிகளாக நடத்தப்பட்டது. டைசியாக 1991/92 சீசனில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 

டெஸ்ட் தொடர்:

பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்

ஒருநாள் தொடர்:

மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

குறிப்பு: ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget