மேலும் அறிய

IND vs AUS: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு..இந்திய அணிக்கு இந்த தொடர் ரொம்ப முக்கியம்... ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு, இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறது. இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் பிஸியாக இருக்கும் இந்திய அணி, இந்த தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. 

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை நடைபெற இருக்கிறது. 

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, மிகப்பெரிய கான்ஃபிடெண்ட் மத்தில் இறங்குகிறது. அதேபோல், இந்த டெஸ்ட் தொடரானது ஐசிசி டெஸ்ட் இறுதிப்போட்டிக்கானது என்பதால் 3-0 அல்லது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற வேண்டும். இதன்மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடம் பிடிக்கும். தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

ஏற்கனவே, ஆஸ்திரேலியா அணி 75.56 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி 58.93 புள்ளிகளுடனும், இலங்கை 53.33 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 

இந்தநிலையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் உடற்தகுதி முழுமையான விவரம் இன்னும் தெரியாதநிலையில், அவர்கள் பெயரும் அணியில் இடம்பெற்றுள்ளது, அதேபோல், 22 வயதான டோட் மர்பி உள்பட பார்டர்-கவாஸ்கர் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. 

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 

டெஸ்ட் தொடர்:

பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்

ஒருநாள் தொடர்:

மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் ஆஸி., அணி 78.57 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேசமயம் 2வது இடம் வகிக்கும் இந்திய அணி (58.93 புள்ளிகள்) வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் ஆஸ்திரேலியாவின் புள்ளி மதிப்பு 59.6 ஆக குறையும். இந்தியாவின் புள்ளி மதிப்பு  68.05 ஆக உயரும்.

இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?

அதேசமயம் இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது  இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக  விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால்  61.11 புள்ளி மதிப்பைப் பெறும். 

4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா  48.72 புள்ளி  மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும். இந்த அணிகளுக்கு சமமாக திகழும். 

ஒருவேளை இந்திய அணி 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 45.4 ஆக குறையும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால் 51.39 ஆகவும், இரண்டில் வெற்றி பெற்றால் 56.9 ஆகவும், மூன்று போட்டிகளில் வென்றால்  62.5 ஆகவும் புள்ளிகள் மதிப்பு இருக்கும்.  ஆனால் குறைந்தது  2 போட்டிகளில் வென்றால் மட்டுமே  இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Embed widget